Today Bible Verse

H.A. Krishnapilai History in Tamil

H.A கிருஷ்ணப் பிள்ளை

     வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பிள்ளை, சிறந்த தமிழ் பண்டிதரின் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே வைணவ நூல்கள் அனைத்தையும் மனப்பாடமாகக் கற்றுத் தேறினார். வைணவ சமயத்தின் தீவிர பக்தனாக மாறினார். கிருஷ்ணப்பிள்ளைக்குத் தமிழ் மீது அதிக நாட்டம். இலக்கண சாஸ்திரங்கள் அனைத்தையும் எளிதாய் கற்று தமிழ் பண்டிதரானார்.

     அச்சமயம், வேதாகமக் கல்லூரி ஒன்றிற்கு தமிழ் ஆசிரியர் தேவைப்பட்டதால் அங்கு தம் பணியை ஆரம்பித்தார். ஆனால் கிறிஸ்தவர்களிடம் தொடர்பு கொள்வதை அவர் விரும்பவே இல்லை. ஒருநாள் ஹக்ஸ்டபிள் என்ற மிஷனெரி ஒரு புதிய ஏற்பாட்டை கிருஷ்ணப்பிள்ளைக்கு கொடுக்கவே, வெறுப்படைந்த அவர் தன் வேலையையும் விட்டுவிட்டார். ஆனாலும் மிஷனெரியின் அன்பு அவரை சிந்திக்க வைத்தது.

     அந்நாட்களில் அநேக உயர்குல வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக தங்கள் இதயத்தைத் திறந்து கொடுத்தனர். அவர்களில் தனக்கோடி ராஜீ என்பவரும் ஒருவர். அவர் கிருஷ்ணப்பிள்ளைக்கு கிறிஸ்துவின் அன்பைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார். ஓர் இரவு, கிருஷ்ணப்பிள்ளையால் தூங்க முடியவில்லை. கிறிஸ்துவைக் குறித்த சிந்தனைகள் உள்ளத்தில் நிறைய ஆரம்பித்தது. இதயம் மெல்லத் திறந்தது. கிறிஸ்துவை தன் உள்ளத்தில் வரவழைத்தார். அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

     தமிழ் பண்டிதரான கிருஷ்ணப்பிள்ளை, கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடல்கள் எழுதவும் பாடவும் ஆரம்பித்தார். இரட்சண்ய யாத்ரீகம், இரட்சண்ய மனோகரம் என்ற அரிய நூல்கள் அவர் மூலமாக வெளிவந்தவையே. மாபெரும் மிஷனெரிகளான சர்ஜெண்ட், உவாக்கர், ஏமிகார்மைக்கேல் மற்றும் பலருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த இவர், 1900 ஆம் ஆண்டு இதே நாள் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று இறைவனை புகழ்ந்து பாட விண்ணகம் சென்றார்.

பிறப்பு: கி.பி:1827, ஏபரல் 23, (ரெட்டியார்பெட்டி, இந்தியா)

இறப்பு: கி.பி:1900, பிப்ரவரி 3, (இந்தியா)

Posted in Missionary Short Story on February 13 at 10:17 AM

Comments (0)

No login
gif