Today Bible Verse

Amanda Smith History in Tamil

அமந்தா ஸ்மித் 


      அடிமைத்தனம் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு சூழ்நிலைகளில், மக்கள் சிக்குண்டு அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். பேச முடியாதவர்களாக சுயமாக எதையும் செய்ய முடியாதவர்களாக, தங்கள் கைகள் கட்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.

     அமந்தா ஸ்மித், அடிமைகளாக வாழ்ந்த கருப்பு இன பெற்றோரின் மகளாக பிறந்தார். தனது குடும்பத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க முயன்ற தந்தையின் முயற்சி ஏதும் பலன் தரவில்லை. ஆனால் ஆண்டவரின் சித்தப்படி, அவரது எஜமாட்டியின் கண்களில் தயவு கிடைத்தது. குடும்பமானது அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றது.

     1856ஆம் ஆண்டு தேவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். 1863ஆம் ஆண்டு, ஜேம்ஸ் ஸ்மித் என்ற கர்த்தருடைய ஊழியரை மணந்தார். ஆண்டவர் தன்னை ஊழியத்திற்கு அழைப்பதை உணர்ந்தார். ஆராதனை ஒன்றில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். தினமும் கைநிறைய சுவிசேஷ கைப்பிரதிகளை எடுத்துக்கொண்டு, வீதிதோறும் கொடுக்க ஆரம்பித்தார். தான் காணும் அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவித்தார். உயிர்மீட்சி கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆன்மாக்களை உயிரடையச் செய்தார். அமந்தாவின் செய்திகள் ஆயிரமாயிரம் பேரைத் தொட்டது.

     1878ஆம் ஆண்டு நண்பர்களின் உற்சாகமான தூண்டுதலினால், இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று, கெஸ்விக் கன்வென்ஷன் கூட்டங்களில் பிரசங்கிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து, நற்செய்தியை அறிவித்தார்.

     இந்தியாவிற்கு திரும்பிய இவர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுப்பட்டு, கோலார் என்ற இடத்தில் அனாதை குழந்தைகள் இல்லம் ஒன்றை அமைத்தார். ஆப்பிரிக்கா நாட்டில் 8 ஆண்டுகள் பணிசெய்த இவர், கருப்பு இன மக்களுக்காக தொழிற்கூடம் ஒன்றை கட்டி, வேலை வாய்ப்பினை அளித்தார். மக்களின் உயர்வுக்காக தன்னை அர்ப்பணித்த இவர், ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் கண்டார்.

பிறப்பு: கி.பி:1837, (மேரிலாண்ட், அமெரிக்கா)

இறப்பு: கி.பி:1915, பிப்ரவரி 15,

Posted in Missionary Short Story on February 13 at 10:29 AM

Comments (0)

No login
gif