Today Bible Verse

Alexander Duff History in Tamil

அலெக்ஸாண்டர் டஃப் 

       பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம். இந்தியாவின் வங்காள மாநிலம் கிறிஸ்துவை அறியும் வாய்ப்பினைப் பெற்றது. பல மிஷனெரிகள் வங்காளத்தை உயிர்மீட்சி அடையச் செய்தனர்.

     கியாந்தர், ரிங்கல் தெளபே, வில்லியம் கேரி, மார்ஷ்மென், வார்டு ஆகியோர் வரிசையில் சிறப்பிடம் பெறுபவர் கனம் அலெக்ஸாண்டர் டஃப். ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரியாக வந்தவர். வரும் வழியில் இருமுறை அவரும் அவரது மனைவியும் கப்பல் சேதத்தினின்று தப்பினார்கள். பின்னர் பல இன்னல்களுக்குட்பட்டு 1830ஆம் ஆண்டு கல்கத்தா வந்து இறங்கினார்.

     இவர் சொற்திறனும், எதையும் சாதிப்பதற்கான ஆற்றலும் படைத்தவர். வங்காள மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எண்ணி, கல்லூரி ஒன்றை 1830ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஆனால் அக்கல்லூரி திறக்கப்பட்டபோது வெறும் ஐந்து மாணவர்களே வந்து சேர்ந்தனர். அலெக்ஸாண்டர் டஃப்பின் அயராத உழைப்பினால் 300 மாணவர்கள் கல்லூரியில் இணைந்தனர். டஃப் பலவித கலைகளையும், ஆங்கிலம் மூலம் அவர்களுக்கு கற்பித்தார்.

     மக்கள் கல்வியில் முன்னேற்றமடைந்ததால் தங்கள் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளை மறையச் செய்தனர். உடன்கட்டை ஏறுதலின் கொடூரம், குழந்தைப் பருவ விவாகமும் விடைபெற்றன. நற்செயல்கள் அனைத்தும் சரியான முறையில் நடைபெற்றன. ஆங்கிலத்தில் கிறிஸ்தவ நற்செய்திக் கூட்டங்களை டஃப் ஆரம்பித்து, அநேகரை கிறிஸ்தவ போதனையில் வளரச் செய்தார். இதனால் வங்காளத்தில் புது யுகம் தோன்றியது.

பிறப்பு: கி.பி:1806, ஏப்ரல் 15, (பெர்த்ஷையர், ஸ்காட்லாந்து)

இறப்பு: கி.பி:1878, பிப்ரவரி 12, (இந்தியா)

Posted in Missionary Short Story on February 13 at 10:34 AM

Comments (0)

No login
gif