Today Bible Verse

Anselm History in Tamil

ஆன்செலம் 

     “ஆண்டவரே இறைவா! மூவொரு கடவுளானவரே! எனது நினைவெல்லாம் உம்மையே சிந்திப்பதாக. எனது நாவு உம்மையே புகழ்வதாக. எனது இதயம் உம்மை மட்டுமே அன்பு செய்வதாக. எனது ஆன்மா உம்மீது வேட்கை கொள்வதாக. எனது உடல் முழுவதும் உம்மைப் பற்றிக் கொள்வதாக.” இவ்வாறு இறைவனிடம் ஜெபித்து அவ்விதமே நடந்தவர் தான் ஆன்செலம்.

     27வது வயதில் துறவறம் பூண்டு துறவற சபையின் தலைவராக மாறினார். மேலும் காண்டர்பரி நகரின் பேராயராக உயர்த்தப்பட்டார். இவர் ஆண்டவரின் சிறப்பான அருள்வரங்களைப் பெற்றவர். தாழ்மை, எளிமை போன்ற குணங்களால் கல்மனதினரையும் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்.

     இவர் காலத்தில் இங்கிலாந்தை ஆண்டு வந்த மன்னன் திருச்சபைகளுக்குப் பெருத்த அநீதிகளை விளைவித்தான். இதனால் இவர் மன்னனை எதிர்த்தார். எனவே மன்னனின் கடுங்கோபத்திற்கும் ஆளானார்.

    திருச்சபை மீது மிகுந்த பற்றும் கரிசனையும் கொண்டதால் அங்கு நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்களை அடியோடு அழித்தார். உயர்வு, தாழ்வுகளை உடைத்தெறிந்தார். நேரத்தை வீணாக்காமல் சீர்திருத்தச் சிந்தனைகள் கொண்ட பல புத்தகங்களையும் எழுதினார். பல இடங்களுக்கு பிரயாணம் செய்து கிறிஸ்துவுக்குள் ஆயிரமாயிரமானவர்களை வழி நடத்தினார்.

   கடின உழைப்புகள் மத்தியிலும், ஆண்டவரின் பிரசன்னத்தை அனுதினமும் உணர்ந்தார். திருச்சபையின் உரிமைகளைப் பறிக்க நினைத்தவர்களை பகிரங்கமாக எதிர்த்தார். ஏனெனில், திருச்சபையின் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தார். முழு உள்ளத்தோடு இறைவனைத் தேட மக்களை வழி நடத்திய இவர் சிறந்த வழிகாட்டியவர்.

பிறப்பு: கி.பி:1033, (ஹாஸ்டா, பர்கண்டி)

இறப்பு: கி.பி:1109, (ஏப்ரல் 21), (இங்கிலாந்து)

Posted in Missionary Short Story on February 13 at 10:41 AM

Comments (0)

No login
gif