Today Bible Verse

Isobel Kuhn History in Tamil

இசெபெல் கூன்

         வாழ்க்கையில் விரக்தி, ஏமாற்றங்கள்; நம்பியவர்கள் கைவிட்டனர், தனிமை வாட்டி எடுத்தது; தூக்கம் வரவில்லை, தற்கொலை செய்துக் கொள்ளலாமா?

     இவ்வாறு பல்வேறு எண்ணங்களுடனும், மனப் போராட்டங்களுடனும் சிக்கித் தவித்த இசபெல் கூனை ஆண்டவர் தம் பணிக்கு அழைத்தார். தூசி படிந்து கிடந்த வேதாகமம் திறக்கப்பட்டது. அழுக்கடைந்த இசபெல்லின் வாழ்வும் அதனால் கழுவப்பட்டது. தன்னை ஓர் மிஷனெரியாக ஆண்டவரிடம் அர்ப்பணித்தார்.

     1928ஆம் ஆண்டு சீன தேசத்திற்குப் புறப்பட்டார் இசபெல். கடினமான மொழிப் பிரச்சனை காணப்பட்டாலும் கனிவுடன் மக்களை நேசித்து அவர்களுடன் அன்புடன் பழகினார்.

     திறந்த வெளிக்கூட்டங்கள் மூலம் அநேகருடைய இருதயங்களைத் திறந்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பு, மக்களின் இருதயங்களை ஆட்கொண்டது.

     லிசு மக்கள் மத்தியில் அவரின் பணி அளவிட முடியாத அளவு பெருகியது. கணவர் ஜானின் உற்சாகம் இன்னும் உத்வேகத்தையும், உறுதியையும் தந்தது. தன் மகளையும் மிஷனெரிப் பணிக்கு அர்ப்பணித்தார் இசபெல்.

     வேதபாடப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக வாலிபப் பெண்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். பின்னர் ஆண்களுக்கெனவும் வேதபாடப் பள்ளிகள் நடத்தப்பட்டன.

     நற்செய்திப் பணிக்கு நடுவே ஏற்பட்ட போர் பிரச்சனைகள் மத்தியிலும், அயராது அரும்பணியாற்றினார் இசபெல். சீனா கம்யூனிச நாடாக மாற்றப்பட்ட போதிலும், இசபெல் லிசு மக்களைக் கர்த்தரின் நாட்டிற்குச் சொந்தக்காரர்களாக மாற்றிய பணி சிறப்பானதாகும்.

பிறப்பு: கி.பி:1901, டிசம்பர் 17, (டொரண்டோ, கனடா)

இறப்பு: கி.பி:1957, மார்ச் 20, (சீனா)

Posted in Missionary Short Story on February 13 at 10:51 AM

Comments (0)

No login
gif