Today Bible Verse

Ingrid Kowieski History in Tamil

இன்கிரிட் கவுஸ்கி


     “அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.”

     “CMSன் அம்மா” என்று அழைக்கப்படும், இன்கிரிட் கவுஸ்கி அவர்கள், அவ்விதமே வாழ்ந்து காட்டியவர்கள். ஏழைகளின் தாயாராக, எளியவர்களின் நண்பராக, தன்னையே தியாகமாக்கினார்.

CMS (கிறிஸ்டியன் மிஷன் சர்வீஸ்) என்பது சுமார் 30,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாழ்வு கொடுத்து, அவர்களை இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கச் செய்து, இன்றும் வழிகாட்டும் ஓர் சிறந்த, ஒப்பற்ற நிறுவனம்.

     சமுதாயத்தில் ஆதரவற்று, அடைக்கலமில்லாமல், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாழ வழி தெரியாமல் தவித்த ஏழைச் சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து CMSன் முதுகெலும்பாய் திகழ்ந்தவரே, இன்கிரிட் கவுஸ்கி.

    ஓர் நாள், சிறுவன் ஒருவன், உடல்நிலை சரியில்லாததால், வாந்தியெடுக்க ஆரம்பித்தான். அதனைக் கண்ட இத்தாய் ஓடிச் சென்றார். அவன் அருகில் உட்கார்ந்தார். அவனை அரவணைத்தார். தன் கைக்குட்டையை எடுத்து, அவன் வாந்தியை கைகளில் ஏந்தினார். அவனைக் கவனிப்பதற்கு தாதியர்கள் இருந்தும், கிறிஸ்துவின் அன்பு இவரை உந்தித் தள்ள, குழந்தைகளின் உற்றத் தாயாராக, தன் பணிகளைச் சிறப்புடன் செய்தார்.

   பல இடங்களில் ஓய்வு நாள் பள்ளிகளை ஆரம்பித்தார். ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவின் அன்பை, ஒருவருக்காவது கூற வேண்டும் என்ற ஏக்கம் கொண்டவர். அவ்விதமாகவே, அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து, பேச்சில் மட்டுமல்லாமல், செயலிலும் காட்டியவர். தன்னிடம் உள்ள எந்த பொருளையும், பிறருக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு வீடு செல்வார்.

  CMSன் நிர்வாகி ஹார்ஸ்ட் கவுஸ்கி அவர்களின் செயல்பாட்டுக்கு, வேகத்தையும், ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தவர். இதனால் இந்திய நாடெங்கும் பல சிறுவர் இல்லங்கள் உருவாகின. இன்றும் 6,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர்.

பிறப்பு: (ஜெர்மனி)

இறப்பு: கி.பி:1995, மார்ச் 15, (இந்தியா)

Posted in Missionary Short Story on February 13 at 11:13 AM

Comments (0)

No login
gif