Today Bible Verse

Eric Liddell History in Tamil

எரிக் லிட்டல் 


     ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள அர்மடேல் பட்டணம் அங்கு ஓர் சுவிசேஷ கூட்டம். மக்கள் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் பேசப்போவது யார்? ஓட்டப் பந்தயத்தின் சாதனை வீரன் எரிக் லிட்டல் என்பவர் தான் அந்நாளின் பிரசங்கியார். 100 மீ ஓட்டத்தில் உலக சாதனை செய்தவர்.

     கிறிஸ்துவின் மீதுள்ள தன் பற்றை உலகம் அறிய வேண்டுமென ஆவல் கொண்டதோடு, தன் விசுவாசத்தையும், வெற்றியின் காரணத்தையும் மக்களிடம் பறைசாற்றிக் கொண்டிருந்தார். அந்த சாட்சி அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது.

     ஸ்காட்லாந்து மிஷனெரிப் பெற்றோரின் செல்ல மகனாக சீனாவில் பிறந்தார். எடின்பரோவில் கல்வி கற்றார். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவித்தார். விடா முயற்சியில் தொடர் வெற்றிகள் குவிந்தன.

     உலகப் புகழா? தேவனுக்குக் கீழ்ப்படிவதா? சாட்சியாய் இருக்க வேண்டுமா? காட்சிப் பொருளாய் மாற வேண்டுமா? மனதிலே போராட்டம். ஆண்டவரின் நாளில் ஆகாத காரியங்களில் ஈடுபட அவர் மனம் இசையவில்லை.

     சாட்சியாய் வாழ்பவர்கள் சாதிப்பார்கள். ஆம். எரிக் லிட்டல் சாதித்தார். 100 மீ ஓட்டத்திற்கு பதிலாக மற்றொரு நாளில் நடந்த 400 மீ ஓட்டத்தில் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார். உலக சாதனை புரிந்தார்.

     கிறிஸ்துவின் போர் வீரராக சீனாவுக்கு மிஷனெரியாக சென்று அநேகரை இரட்சிப்பின் பாதையில் நடத்திய எரிக் லிட்டல் இதே நாள் பிப்ரவரி மாதம், 1945 ஆம் ஆண்டு தன் பூலோக ஓட்டத்தை முடித்தார்.

பிறப்பு: கி.பி:1902, ஜனவரி 26, (டைன்ஜின், சீனா)

இறப்பு: கி.பி:1945, பிப்ரவரி 21, (சீனா)

Posted in Missionary Short Story on February 13 at 11:16 AM

Comments (0)

No login
gif