Author

Album

Neer neerae periyavar Lyrics PPT நீர் நீரே பெரியவர்

நீர் நீரே பெரியவர்

நீர் ஒருவர் நீரே பெரியவர்

மிகவும் மிகவும் பெரியவர்

நீர் மிகவும் பெரியவர்

 

ஏல்ரொயி என்னைக் காண்பவரே

ஏல்ஷடாய் சர்வ வல்லவரே

ஏலோகிம் எங்கும் உள்ளவரே

யெஷூவா ஆட்டுக் குட்டியானவரே

 

கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி

புது ஒலியெழுப்பி ஆராதிக்கின்றோம்

பாடல்கள் பாடி ஆட்டங்கள் ஆடி

கூட்டங்கள் கூடி ஆராதிக்கின்றோம்

 

மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்

பள்ளத்தை நினைத்து சமமாக்குவீர்

கரடுகள் முரடுகள் நேராக்குவீர்

செம்மையான பாதையிலே நடத்துவீர்

 

வீசும் புயல் காற்றை படைத்தவரே

தூதர் துதிக்குள்ளே இருப்பவரே

மொத்த உலகத்தை ஆள்பவரே

எங்கள் இதயத்தில் வாழ்பவரே

Posted by Lyrics Manager on August 16 at 07:43 AM