என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே-2
பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர்
பயமில்லையே-என்னை நடத்திடும்
1.சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை
2.பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ-2
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை
3.முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே-2
மேலானதை நீ சுதந்தரிக்க வேரூன்ற
செய்வார் பயமில்லையே-2-பயமில்லை
அல்லேலூயா -6 ஒசன்னா -6