Author

Yeno yeno yen intha muzhuval Lyrics PPT ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்

ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்

 (முழுமையான காதல்)?

 

அசத்தனாம் (பெலவீனன்) என் மேல்

ஆசத்தி (விருப்பம்) கொண்ட

அசத்துரு (நண்பன்) உம் போல எவருமில்லை

 

ஏனோ ஏனிந்த அசலை (அசைக்கப்பட முடியாத) அன்பு

ஏனோ என் மீது சிலுவை அன்பு

 

தவறுகள் கொண்டேன்

நசினைகள் (பழுதுகள்) கொண்டேன்

ஆனாலும் சிலுவையின் தலையளி (மன்னிக்கும் அன்பு) கண்டேன்

அசடம் (உதவாதவன்) என்றே

அசட்டை (ஒதுக்கப்படுதல்) கண்டேன்

அசரா (தடுக்க முடியாத) உன் அசரங்கள்

 (அகிலத்தை தாங்கும் கரம்) தாங்க கண்டேன்

 

நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்

எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்

தணியா (தணிந்து போகாத) ஒரு தகப்பனின்

 தட்பம் (தகப்பனின் அன்பு) கண்டேன்

Posted by Lyrics Manager on September 26 at 06:58 AM