Author

Album

Alangaara vaasalaale piravesikka Lyrics PPT அல்லேலூயா தேவனுக்கே

அலங்கார வாசலாலே பிரவேசிக்க

வந்து நிற்கிறோம்

தெய்வ வீட்டின் நன்மைகளாலே

நிரம்பிட வந்திருக்கிறோம்

 

ஆராதிக்க வந்தோம்

அன்பு கூற வந்தோம்

யெகோவா தேவனையே

துதித்திட வந்தோம்

தொழுதிட வந்தோம்

தூயவர் இயேசுவையே

 

  1. ஆலயம் செல்லுவதே

அது மகிழ்ச்சியை தந்திடுதே

என் சபையுடனே உம்மை துதித்திடவே

கிருபையும் கிடைத்திட்டதே - ஆராதிக்க

 

  1. பலிகளை செலுத்திடவே

ஜீவ பலியாக மாறிடவே

மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - ஆராதிக்க

 

  1. நன்மையை செய்தவர்க்கே

நாங்கள் நன்றி செலுத்துவோமே

எம் காணிக்கையை உம் கரங்களிலே

உற்சாகமாய் விதைக்கிறோமே - ஆராதிக்க

 

  1. துதிகன மகிமையுமே

முழு மனதோடு செலுத்துவோமே

சம்பூரண ஆசிர்வாதங்களால்

திருப்தியாய் அனுப்பிடுமே - ஆராதிக்க

Posted by Lyrics Manager on December 10 at 05:16 AM

Popular Blogs