கர்த்தர் உன்னை உயர்த்துவார்
கலங்காதே கண்மணியே
ஏற்றகாலத்தில் ஏற்ற நேரத்தில்
உயர்த்தி மகிழ்ந்திடுவார்
1.தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்த
ஆபிரகாமை தேவன் உயர்த்தினாரே
அதுபோல் உன்னையும் உயர்த்தி மகிழ்வார்
வார்த்தைக்கு கீழ்படிந்திரு
2.நூறு மடங்கு ஆசீர்வதித்து
ஈசாக்கை தேவன் உயர்த்தினாரே
அதுபோல் உன்னையும் உயர்த்தி மகிழ்வார்
உண்மையாய் வாழ்ந்திரு
3.ஆடுகள் மேய்த்து வந்த தாவீதை
அரசனாய் தேவன் உயர்த்தினாரே
அதுபோல் உன்னையும் உயர்த்தி மகிழ்வார்
பொறுமையாய் காத்திரு