Today Bible Verse

Prayer Quotes in Tamil - Part 1

ஜெபமே ஜெயம் 

 

  • ஊழியத்தின் வெற்றி முழங்கால் வேலையினால் மாத்திரமே சாத்தியமாகும். – சி. எச். ஸ்பர்ஜன்

 

  • ஜெபம் என்பது பரலோகமும் பூலோகமும் ஒன்றை ஒன்று முத்தமிடும் நிகழ்ச்சியாகும் - யூத அறிஞர்

 

  • ஒரு நாளில் எட்டு அல்லது பத்து மணி நேரம் ஜெபிக்காவிட்டால் நான் வீணாகப் போய்விட்டேன் என நினைக்கிறேன். – ஜான் வெல்ச்

 

  • ஊழியரின் முதல் தேவை ஜெபம்! இரண்டாவது தேவை ஜெபம்! ஆகவே அன்பானவர்களே ஜெபியுங்கள். – எட்வர்ட் பேசன்

 

  • தேவனின் சித்தத்தை மேற்கொள்வதற்கு முயற்சிப்பது ஜெபம் என்றெண்ணாது; அவரது சித்தத்திற்கு முழுவதுமாய் ஒப்புவிப்பதே ஜெபமாகும். - ஆர்ச் பிஷப்

 

  • தேவனின் பிரசன்னத்தை உணர்வதுதான் ஜெபம். - சகோ.லாரன்ஸ்

 

  • நான்அதிகாலை ஜெபம் செய்யாவிட்டால் அந்நாளை என் வாழ்வில் இழந்து விட்டதாக உணருகிறேன். - மார்ட்டின் லுத்தர்

 

  • நான் என்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பு என்னுடைய இருதயத்தை தேவனுக்கு நேராக ஏறெடுக்காமல் எழுந்திருக்க இயலாது. - ஜான் பிளட்சர்

 

  • நான் உருவாக்கப்படவும் உண்மையாய் அவருக்கு ஊழியம் செய்யவும் ஜெபம் அவசியம். – டாக்டர் பில்லி கிரகாம்

 

  • நான் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்கு முன்பு அதிகாலையில் அவரது சமுகத்தில் விழிக்க வேண்டும். - ராபர்ட் மரே மச்சாயின்

 

  • ஜெபிக்க கற்றுக்கொண்டவன் பரிசுத்த வாழ்வின் இரகசியத்தை அறிந்து அனுபவிக்கிறான். – வில்லியம் ஷா

 

  • அந்தரங்க ஜெபத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது நூல் நிலையங்களும், கல்வித் திறனும் வெறுமையானதாகவே தெரிகிறது. ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனிடம் திரும்பும் நாளே நமது பொற்காலம் எனலாம். அப்பொழுது தான் பரலோகத்தின் வாசல் விரிவாக திறக்கப்படும். நமது உள்ளங்களும் தேவ மகிமையின் மையத்தினை நாடி செல்ல முடியும். – ஸ்பர்ஜன்

 

  • அதிகாலையில் தேவனைத் தேடி காத்திருந்து ஜெபிப்பவர்கள் அந்த நாள் முழுவதும் தங்கள் வாழ்வில் தேவ பிரசன்னத்தை உணர்வார்கள். – ஜான் பன்யன்

 

  • இருதயத்திலிருந்து புறப்பட்டு வருவதே இருதயத்தைத் தொடும். உயிருள்ள மனசாட்சியினின்று தோன்றுவதே மனசாட்சியைக் குத்தும். - வில்லியம் பென்

 

  • கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழியாத வரை ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றாது. – ஜான் வான்ஸ்

 

  • ஜெபத்தின் வல்லமையில் சாத்தானுக்கு மனிதரைவிட அசையாத நம்பிக்கை உண்டு. ஆனால் அவன் ஜெபிப்பவன் அல்ல, ஜெபத்தினால் பாதிக்கப்படுபவன். – கே. கே கிங்

 

  • தனி ஜெபம் நம்முடைய ஊழியத்தில் எடுத்துரைக்க இயலாத, ஈடு இணையற்ற ஆசீர்வாதத்தினை அளிக்க வல்லது. அது பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் அபிஷேகமாகும். – ஸ்பர்ஜன்

 

  • தேவன் நமது ஜெபங்களுக்கு பதிலளிப்பாரேயன்றி தாமக வேறெதுவும் செய்ய மாட்டார். - ஜான் வெஸ்லி

 

  • ஜான் நாக்ஸ் உபவாசித்து ஜெபித்தான். இங்கிலாந்தின் அத்தனை படைகளையும் விட, அவனது ஜெபத்திற்கே அஞ்சுகிறேன் என்றாள் ஸ்காட்லாந்தின் இரத்த வெறி ராணிமேரி. - C.H. ஸ்பர்ஜன்

 

  • ஜெபமும் தற்பரிசோதனையும் குறைவதால்தான் விசுவாசிகள் இரட்சிப்பில் நிலை நிற்க முடியவில்லை. – வில்லியம் பிரேம் வெல்

 

  • அதிகாலைதோறும் 2 மணி நேரமாவது நான் ஜெபிக்கத் தவறினால், வெற்றி பிசாசுக்கு போய் விடுகிறது. - மார்டின் லுத்தர்

 

  • ஏதோ ஒரு காரணம் சொல்லி ஜெபக்கூட்டங்களுக்கு மட்டம் போடுவது பின்மாற்றத்தின் அறிகுறியாகும்; ஜெபக்கூட்டத்தைவிட முக்கியமான கூட்டம் வேறென்ன? ஜெப இருதயமே மிகப் பெரிய தேவை. ஆனால், அதைப் பெறுவதே மிகக் கடினம். இதுவே நான் திட்டமாய் கண்டறிந்தது. - சார்லஸ் பின்னி

 

  • நமக்கு சிந்திக்கவும், உணரவும் முடிகிறதே தவிர அதை செயல்படுத்த முடியவில்லையே, செயல்படுத்த முடியாவிடில் செயலிழந்தவர்களாகி விடுவோம். - C.S.லூயிஸ்

 

  • அநேக பகல் இரவுகளை தரையிலே முகங்குப்புற விழுந்து அழுது கிடப்பதற்கு நான் தேவனால் அசைக்கப்பட்டிருந்தேன். – மார்டின் லுத்தர்

 

  • இதயத்தோடு இதயம் பேசினாற்போல், பெரிய சப்தத்தினிடையே சில அரிய யோசனை சொல்லி, துன்பத்தினூடும், துக்கத்தினூடும் பேசவே, தேவன் சில வேளைகளில் உள்ளே விட்டுக் கதவை அடைக்கிறார். - ஸோல் போர்ட்
Posted in Prayer Quotes on January 05 at 12:23 PM

Comments (0)

No login
gif