Eppozhuthu um sannithiyil Lyrics PPT எப்பொழுது உம் சந்நிதியில்

எப்பொழுது உம் சந்நிதியில்

வந்து நிற்பேன்

தாகமாயிருக்கின்றேன்

 

ஜீவனுள்ள தேவன்மேலே

தாகமாயிருக்கின்றேன்

அதிகமாய் துதிக்கின்றேன்

தாகமாயிருக்கின்றேன்

 

தண்ணீருக்காய் மானானது

தாகம் கொள்வதுபோல்

என் ஆன்மா உம்மைத்தானே

தேடித் தவிக்கிறது

 

இரட்சகரே உம் வருகையிலே

நிச்சயமாய் உம்முகம் காண்பேன்

தாகமாய் இருக்கின்றேன்

அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது

 

ஆத்துமாவே நீ கலங்குவதேன்

சோர்ந்து போவது ஏன்

கர்த்தரையே நம்பியிரு

அவர் செயல்கள்

நினைத்துத் துதி - இரட்சகரே

 

காலைதோறும் உம்பேரன்பைக்

கட்டளையிடுகிறீர்

இரவுபகல் உம் துதிப்பாடல்

என் நாவில் ஒலிக்கிறது

Posted by Lyrics Manager on April 08 at 01:27 PM