மான்கள் நீரோடையை வாஞ்சித்து அலைவதுபோல்
எந்தன் ஆத்துமா தேவா உம்மை நாடுது ... (2)
- கடந்த காலங்களிலெல்லாம்
உம் சமூகத்தில் மகிழ்ந்திருந்தேன்
இன்று உம்மை எதிர்பார்த்து
மனச்சோர்வால் வாடுகின்றேன்
என் ஆத்துமாவே ஏன் கலங்குகின்றாய்
உன் தேவனை நோக்கிக் கூப்பிடு...
- இரவும் பகலும் எந்தன் கண்ணில்
கண்ணீர் வழிவதேன்
அமைதி தேடி நான் இன்று
எங்கே ஓடுவேன்
என் ஆத்துமாவே ஏன் கலங்குகின்றாய்
உன் தேவனை நோக்கிக் கூப்பிடு...
- உன் தேவன் எங்கே என்று தினமும்
என் பகைவன் கேட்கின்றான்
நானோ உந்தன் முகம் தேடி
மனச்சோர்வால் வாடுகின்றேன்