இன்றளவும் அநேக வேற்று மதத்தினரால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கிறிஸ்தவக் கோட்பாடு என்றால் திரித்துவம்!(அநேக கிறிஸ்தவர்கள்கூட இதில் இன்னும் தெளிவு பெறவில்லை எனலாம்). அதுவும் ஓரிறைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மதங்கள், கிறிஸ்த்வத்தை தீவிரமாக குற்றம் சொல்ல கையாடப்படும் ஒரு வார்த்தைதான் “திரித்துவம்”.(அதைப் பற்றி பின் ஒரு நாளில் விளக்கமாய்ப் பார்க்கலாம்) அந்த திரித்துவத்தில் இரண்டாம் நபராக இருக்கும் ஆண்டவர் இயேசுவை குறிப்பிடும்போது, வேதத்தை எழுதிய ஆசிரியர்கள் , ஆவியானரால், சில இடங்களில் இயேசு கிறிஸ்து எனவும், சில இடங்களில் கிறிஸ்து இயேசு எனவும் அவரைக் குறிப்பிடுகின்றனர். ஏன்? என்று யோசித்தால் சிலர் அதில் என்ன பெரிய வித்தியாசம் என்றும், சிலர் இரண்டுமே ஒன்றுதான் என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆழமான அர்த்தத்தோடு தான் என் ஆண்டவர் வேதத்தை எழுதியுள்ளார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உண்டு( ஒரு புள்ளிவைத்தால் கூட அதற்கும் என் ஆண்டவர் ஒரு நோக்கம் வைத்துள்ளார் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு). அதற்காய் ஆரய்ந்ததில் கிடைத்தது, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்ன காரியத்தை நான் விளங்கிக்கொள்ள அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1 தீமோத்தேயு 2 : 5,6ல்
”தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது” என்று வருகிறது.
யூதா நிருபம் 1: 1ல் இயேசுகிறிஸ்து (இன்னும் அநேக இடங்களில்) எனவும்,
பிலிப்பியர் 1 :1 ல் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது, இரண்டுமோ கொடுத்து சுட்டப்படுகிறார் ஆண்டவர் இயேசு.
இயேசு என்றால் பாவங்களை நீக்கி நம்மை இரட்சிக்கிறவர், கிறிஸ்து என்றால் அபிஷேகிக்கப்பட்ட தேவகுமாரன்.
இதில் என்ன இருக்கிறது மாற்றி உபயோகப்படுத்தி அழைப்பதில்? என்றால் இருக்கிறது என்றே நான் கூறமுடியும்.
பிலிப்பியர் 2 ஆம் அதிகரத்தில் பவுல் பயன்படுத்தும் வசனங்கள் ( பிலி 2 :5-11) வரை புதிய ஏற்பாட்டின் ஆதி விசுவாசிகளுக்கு(வேதம் தொகுக்கப்படாத காலகட்டத்தில்) தெய்வத்தைப்பற்றின கோட்பாடு சரியாய் சென்று சேர, கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு கீர்த்தனையாகும்.
”வெறுமையாக்கினார்” (2:7) என்ற பதம் அவர் கிறிஸ்துவாய் இருந்து வெறுமையாக்கி மனுஷசாயலானதைக் (இயேசுவாய் வந்ததை) குறிப்பிடுகின்றது, அதுவே (2:11)ஆம் வசனம் இயேசுவாய் இருந்து மீண்டும் எல்லாவற்றுக்கும் மேலாய் உயர்த்தப்பட்டதை குறிப்பிடுகின்றது.
தேவன் மனுஷனாகி பூமிக்கு வந்ததில் தொடங்கும் அந்தப் பாட்டு, மனுஷனாயிருந்த இயேசு கிறிஸ்துவாய் உயர்த்தப்பட்டதில் முடிகிறது. ஆண்டவர், மனுக்குல மீட்ப்பிற்காய் எடுத்த பயணம் தொடங்கின இடத்தையும், கொண்ட உருவையும், மீண்டும் முடிந்த இடத்தையும் இந்தப் பாடல் அழகாக விளக்குகிறது.
(The switch from
Christ Jesus to
Jesus Christ in
Philippians 2 aligns perfectly with the theme of the hymn Paul quotes. The hymn begins with God becoming man—thus, “Christ Jesus” (the heavenly title, then the human name). The hymn ends with the Lord ascending to glory—thus, “Jesus Christ” (the human name, then the heavenly title). The Lord’s designations reflect the direction He is taking.) நன்றி ”www.gotquestions.org “
’கிறிஸ்துஇயேசு’ அவரின் தெய்வீகத்திலிருந்து மனுஷ உருகொண்டதையும், ’இயேசுகிறிஸ்து’ அவர் மனுஷனாயிருந்து உயர்த்தப்பட்டதையும் குறிப்பதாக இருக்கிறது.
அவர் இயேசுவாய் இருந்தபோதே 100% தெய்வமாகவும், 100% மனுஷனாகவும் இருந்தார் என்பது நித்ர்சனமான உண்மை, அவர் பெயரே அதை வெளிப்படுதியுள்ளது. பழைய ஏற்பாடு தொடங்கி அவர் தம்மை வெளிப்படுத்தும் விதம் தம் நாமத்தைக் கூறுவது தானே!!!
யாத்திராகமம் 3
- அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
- அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
யாத்திராகமம் 34 :5-7,
5.கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
6.கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
7.ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
நியாயாதிபதிகள் 13
17.அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
18. அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
அவர் நாமமே அவரை வெளிப்படுத்துகிறதே!!! எத்துனை கரிசனையுள்ள தேவனை நாம் தெய்வமாகக் கொண்டுள்ளோம்.
Comments (2)