லூக்கா 23:43 - இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- இந்த வார்த்தையை எப்பொழுது சொல்லுகிறார் ஆண்டவர்? – சிலுவையில் இருக்கும்போது, சிலுவைக்கு பின் அவர் சரீரம் எங்கு வைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும் - யோவான் 19:41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது – அப்படியென்றால் நம் ஆண்டவர் மரணத்திற்கு பின்னான மகிமையைப் பற்றி கூறுகிறார்.
- ஆண்டவரைப் பார்ப்பதற்கு முன் நாம் நம் கண்களை கள்ளர்கள் பக்கம் திருப்புவோம் வாருங்கள்
- இரண்டு குற்றவாளிகள் - 32 ஆம் வசனம் பதிவு செய்கிறது இரண்டு குற்றவாளிகளைப்பற்றி, அவரோடு சிலுவையில் அறையப்பட கொண்டுபோனார்கள்.
- அந்த இருவரின் குணதிசியங்களைப் பார்த்தோமானால், சுற்றிலும் இருக்கும் அதிகாரிகள், சேவகர்கள், மத தலைவர்கள் அத்தனை பேரும் ஆண்டவரை நிந்திக்கின்றனர், இருவரில் ஒரு கள்வன் தன்னைச் சுற்றிலும் நிற்கும் அவர்களின் செயல்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான், இந்த நேரத்தில் அவரை இகழ்கிறான்? அவனே தண்டிக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றத்திற்கு இது நியாயமே, ஆனால் அவன் தன் மரணம் நெருங்கிய வேலையிலும் தான் செய்ததற்காக மனஸ்தாபப்பட்டதாகத் தெரியவில்லை, மாறாக அடுத்த குற்றத்தைச் செய்கிறான் – இன்னும் சொல்லப்போனால் உலகம் செய்வதையே செய்கிறான், குற்றமே இல்லாத ஒரு நபரை இகழ்கிறான்.
- 39ஆம் வசனம் - அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
- மற்றவனுடைய இருதயம், சுற்றிலும் நடப்பவற்றை பார்த்து, பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்கிற ஆண்டவரின் வர்த்தையைக் கேட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்து, மரணத்தருவாயில் தான் செய்த தப்பிதத்தை உணர்ந்தவனாய் காணப்படுகிறான் – இதை அவன் வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது,
- மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
- மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
தேவனுக்கு பயப்படுகிறவனாய் காணப்படுகிறான்.
- நாம் கொஞ்சம் யோசிப்போம்? தண்டனை எதற்கு தரப்படுகின்றது? திருந்துவதற்காகவே! நமக்கும் இந்த கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் நம்மைசுற்றிலும் நடக்கும் காரியங்களை பார்த்தால், முதல் கள்வனைப்போல் தான் – ”நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்”, இவனுடைய நினைப்பு மற்ற அதிகாரிகள், சேவகர்கள் போல, எங்கே இப்பொழுது சிலுவையைவிட்டு இறங்கி உன்னை இரட்சித்துக்கொள், பின்பு எங்களையும் இரட்சி என்பதாய், நம்பிக்கையற்றதாய், தேவனுடைய மதிப்பை குறைப்பதாய் உள்ளது. சாகும் தருவாயிலும் உலகத்திற்கு ஒத்தவேஷம்.
- இரண்டு பேரும் சிலுவையிலறையப்பட்டுள்ளார்கள், இருவருமே இயேசுவின் அருகில் தான் இருக்கிறார்கள், இருவருமே சுற்றிலும் நடப்பவைகளைப் பார்க்கிறார்கள், முதலாமானவன் உலகத்தின் பக்கம் தன் பார்வையை செலுத்துகிறான், இரண்டாமானவன் தேவன் பக்கம் பார்வையை செலுத்துகிறான், தன் தவறை உணருகிறான், அவனுடைய புரிந்துகொள்ளுதல் விரிவடைந்து, தன் அருகில் இருக்கும் இயேசுவின் தன்மையை உணருகிறான், அவருடைய ராஜ்யத்தைக்குறித்த பிரசங்கத்தைக் கேளாமலே, அவர் ராஜா என்பதை விசுவாசித்து, ஒரு சிறு விண்ணப்பம் செய்கிறான், ” ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” – இதே வார்த்தையை யோசேப்பு பானபாத்திரக்காரனிடம் சொன்னான், நினைத்தருளும், நெகேமியா கேட்டார் ‘நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாகஎன்னை நினைத்தருளும்.,
இந்த கள்வன் அதையே கேட்கிறார், இவர் என்ன செய்துவிட்டு என்னை நினைத்தளும் என்று கேட்கிறார்?
(இதெல்லாம் கொஞ்சம் நினைச்சிபாருங்கன்னு நாம் சொல்வதுபோல்), இருதயம் இலகுவாயிருந்தால் அதை அசைப்பது எளிது, அது தேவன் பக்கம் திரும்புவதும் எளிது, கடினமாயிருந்தால் தான் அதை உடைக்க வார்த்தைகள்(பிரசங்கம்) தேவை, நாம் சூழ்நிலைகளை கவனித்தாலே நாம் தேவனை தேடவேண்டியதின் அவசியத்தை அவைகள் நமக்கு விளங்கப்பண்ணும்.
பிரசங்கம் இல்லை, மன்றாட்டு ஜெபங்களில்லை, அபிஷேக கூட்டங்கள் இல்லை அமைதலாய் ஒரு மனம்திரும்புதல்.
அந்தக் கள்வன் சொல்லும் ஒரு வார்த்தை ‘நினைத்தருளும்’, என்ற ஒரு வார்த்தைக்கான பரிசு என்ன தெரியுமா? பரதீசில் இடம்.
“Immediate repentance will results in immense Rewards”
அவன் ஜெபத்திற்கான பதில் ”இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”. இந்த வார்த்தை ஆண்டவரின் வாயிலிருந்து வந்தவுடன் என்ன நடந்திருக்கும், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், ஆம் அந்த கள்வன் சிலுவையிலேயே பரதீசை அனுபவிக்கத்தொடங்கியிருப்பான்.
எல்லோரும் சொல்வார்கள், கடைசி நேரத்தில் கள்வன் காப்பாற்றப்பட்டான் என்று, நான் சொல்கிறேன் அவனுக்கான நேரத்தை, அவனை ஆண்டவர் சந்த்தித்த அந்த நேரத்தை சுற்றிலும் இருந்த அநேகரைப்போல அவன் வீணடிக்கவில்லை, அவன் பிரயோஜனமுள்ளதாக்கிக் கொண்டான், அது அவனுக்கான கடைசி வாய்ப்பில்லை அது தான் அவனுடைய முதல் வாய்ப்பு!
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம்?????
Comments (1)