Divan Dani

வாழ்க்கையை அன்பு மயமாக்கிய அன்னை தெரேசா!

‘அன்பு என்பது சொற்களில் வாழ்வ தில்லை அன்(பு)பைச் சொற்களால் விளக்கவும் முடியாது, செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு’ என்றார் அன்னை தெரேசா. அவர் வாழ்க்கை யும் அன்புமயமாகவே காணப்பட்டது. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்பு தன்னைப் புகழாது என்று அப். பவுல் குறிப்பிட்டுள்ளார். அன்னை
யின் அன்பின் செயற்பாடே அவரை புனிதராக்கியது.
‘சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்’ என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன்னையே இறைப் பணிக்காக அர்ப்பணித்து, உலகத்திற்கு சாந்த குணத்தையும் கருணையும் காண்பித்து ஒரு முன்மாதிரி யாக வாழ்ந்த அன்னை தெரேசா மரித்தாலும் இன்றும் ஜீவனுள்ள சாட்சியாக உலக கத்தோலிக்கர்களின் இருத யங்களில் வீற்றிருக்கிறார்.
அன்னை தெரேசா இயேசு கிறிஸ்துவின் திருபெயரால் ஏழை எளியவர்களுக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் கடந்த 5 ஆம் திகதி அன்னைக்கு “புனிதர் பட்டம்” வழங்கி அருட்பணியை மேன்மைப்படுத்தினார்.
‘அன்னை தெரேசா கருணையுள்ளத் தினால் நோய் வாய்ப்பட்ட நிராதரவான உயிர்களை பாதுகாத்தார். அத்துடன், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு சிறந்த அருட்பணியாளராக விளங்கி, வறிய வர்களுக் காகவே கன்னியாஸ்திரி செயற்பட்டார்’ என்று வத்திகானிலுள்ள புனித பீற்றர் தேவாலயத்தின் முன்றலில் திரன்டிருந்த மக்களுக்கு பாப்பரசர் பிரான்ஸிஸ் அன்னை திரேசாவை புனிதராக திருநிலைப்படுத்தும் வைப
வத்தில் குறிப்பிட்டார்.
உலகில் கைவிடப்பட்டவர்கள் மீது தனது கவனத்தைச் செலுத்தியிருந்த அன்னை திரேசா கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு வாய்ந்தவராக நோக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துன் அடிச்சுவட்டைப் பின்பற்றி வறுமைப் பட்ட மக்களுக்கும் நிர்க்கதிக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும் கருணையுள்ளமாக செயற்பட்டார்.
அன்னை தெரேசா ஐரோப்பிய கண்டத்திலுள்ள அல்பேனியா நாட்டின், நிக்கல் மற்றும் டிரானா
போஜாஜியூ தம்பதியினருக்கு கடைசி மகளாக 1910.08.26 ஆம் திகதி பிறந்தார். ஆனாலும் தனது ஞானஸ்தானம் பெற்ற தினமான 1910.08.27ஆம் திகதியே தனது பிறந்த திகதியாக குறிப்பிட்டார். அன்னை தெரேசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். கோன்ஜா என்பதற்கு ரோஜா அரும்பு என்று பொருள்படும்.
தனது சிறுபராயம் முதல் கத்தோலிக்க பக்திநெறியில் வளர்க்கப்பட்டார். அத்துடன் இறைவன் மீது மாசற்ற அன்பை செலுத்தினார். இதனிமித்தம் தனது 18 ஆவது வயதில் லொரேட்டா கன்னியர் மடத்தில் இணைந்தார். அன்று ஆரம்பித்த இறைத்தொண்டு, தனது வாழ்வை பின்னிட்டுப் பார்க்காமல் இறை இராஜ்யத்தின் இலக்கை நோக்கி பயணிக்கலானார்.
1929 ஆம் ஆண்டு அருட்பணியாகராக இந்தியாவிற்கு வந்த அன்னை, தனது துறவற பயிற்சியினை முடித்து, தனது துறவற உறுதிமொழியினை 24.05.1931 இல் அறிக்கை செய்தார். அத்துடன், கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பாடசாலையில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 14.05.1937 அளித்தார்.
அருட்பணியுடன் சமூகப் பணியாளராக செயலாற்ற அன்னை ஒரு பாடசாலை ஆசிரியராக தொண்டாற்றினார். கல்கத்தா பகுதிகளில் காணப்பட்ட வறுமை நிலை அவரை கலங்கச் செய்தது. 1943 இல் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அப்பகுதிக்குக் கொண்டு வந்தது. 1946 இல் இனவன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.
இறை தியானத்திற்காகக் கல்கத்தா விலிருந்து டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு பயணம் செய்த பொழுது, 10.09.1946 இல் அவருக்கு ஏற்பட்ட உள்ளு ணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பி னுள் நிகழ்ந்த அழைப்பு" என குறிப் பிட்டுள்ளார். "ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது இறைவனின் அழைப்பின் நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்று அவர் 1948 இல் தனது சமூக சேவையை விரி வுப்படுத்தினார்.
அன்னை இந்திய குடியுரிமையினைப் பெற் றுக்கொண்டு, தனது கன்னியஸ்திரி வஸ்திரத்தினை நீல கரையிடப்பட்ட வெண்ணிற சேலை அணிந்தவராய், குடிசை பகுதிகளுக்குள்சென்று சேவை யாற்றினார். ஆரம்பத்தில் பாடசாலை ஆரம்பித்த அவர், பின்னாளில் ஆதரவற்றோர், பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து, அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத் தந்தன.
‘பிறர் அன்பின் பணியாளர் சபை’யை மறை மாவட்ட அளவில் ஆரம்பிக்க 1950.10.07 இல் கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்தது. இச்சபையின் குறிக்கோளாக, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற் றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள், சமூகத்தில் புறக்கணிக்கபட்டவர்கள், கைவிடப்பட்டவர்களை, சமூகத்திற்கே பாரமென்று கைவிடப்பட்டவர்கள் கவனித்தலே இறைபணியாக கொண்டு செயற்பட்டார். கொல்கத்தாவில் சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று உலகெங்கிலும் 6000க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை கவனிக்கும் இடமாகவும் மடமாகவும் திகழ்கிறது.
இந்தியா முழுவதும் 1960 ஆம் ஆண்டு நல்வாழ்வு மையங்கள், அநாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் தங்குமிடங்கள் ஆரம்பித்து, அதனை உலக ரீதியாகவும் செயற்பட வைத்தார். அவர் இலங் கைக்கு வருகை தந்த போது அவரின் தொண்டு இயக்கத்தை இலங்கையிலும் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை தெரேசா 5.9.1997 இல் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். இன, மத சிந்தனைக்கு அப்பால் சென்று அவர் ஆற்றிய சேவைக்கு பரிகாரமாக இந்திய அரசு பூரண அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கை நிறைவேற்றியது. ‘நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட் டுள்ளது’ என்ற திருவிவிலிய வார்த்தையின் பிரகாரம் ஒளிவிளக்கானார்.
இந்தியவின் உயர் விருதுகளான, 1962 இல் பத்மஸ்ரீ விருது, 1972 இல் ஜவகர்லால் நேரு விருது, 1980 இல் பாரத ரத்னா உட்பட இந்தியாவின் உயர்வான விருதுகள் உட்பட அன்னைக்கான தபால் முத்திரையும் வெளியிட்டு கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வ தேச நாடுகளிலும் அன் னைக்கு தபால் முத்திரைகள் வௌியிடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1962 இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான விருது, 1972 இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, 1973 இல் டெம்லெடொன் விருது, 1985 இல் அமெரிக்காவின் உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம், 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசு உலகத்தின் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தாழும் இறை யழைப்பிற்கு பாத்திரமாக சமூகப் பணியிலே இறைவனின் அன்பைக் காண்பித்தார்., "நான் சமூக சேவகி அல்ல", என்றும், "நான் சமூக சேவைக்காக இவற்றைச் செய்யவில்லை, கிறிஸ்துவுக்காவே இதைச் செய்கிறேன்" என்றும் அன்னை தெரேசா குறிப்பிட்டுள்ளார்.
அன்னையின் கனிவு, இரக்கம், அன்பு ஊடாக இறையன்பை காண்பித்தார். இப்பூமியில் இருளில் வாழ்வோர்க்கு ஒளிவிளக்காக திகழ்ந்தார். கைவிடப் பட்டவர்களுக்கு புகலிடமானார். அன்னையின் பணிகள், இன்றும் தொடர்ந்து நிலைநிற்கவே அன்னைக்கு புனிதர் பட்டமளித்து அவரின் இறைசேவையை மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Short Message on February 12 at 03:48 AM

Comments (0)

No login
gif