இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் - உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
- என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
- எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
- பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
- உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
- சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
- தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே