நாட்கள் மிகவும் பொல்லாததாகிக்கொண்டிருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் காலத்தை பிரயோஜனப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமற்று வாழ்வோர் நம்மில்அநேகம். உதவ ஆவியானவர் இருக்க உதவியற்றவன் என்கிற எண்ணம் கொண்டு உலகில் உலவுகிறவர்கள் ஏராளம். விருப்பப்பட்டு எகிப்திலிருந்து எடுத்துநட்ட ஆண்டவருக்கு கசப்பான கனிகொடுத்த இஸ்ரவேலரைப்போல், நம்மில், இன்னும், இருதயத்தில் எகிப்தைச்சுமப்பவர் உண்டே. உன்னதம், உயர்ந்த எண்ணம், உள்ளார்ந்த மாற்றம், உயிராய் கிறிஸ்து என்றிருக்க வேண்டிய யௌவன ஜனம் உண்ணவும், உடுக்கவும் கொள்கிறது கவலை. மனம்திரும்புதலுக்கென்று தேவனுக்கேற்ற துக்கம் கொள்ள வேண்டிய நாம் தேவையற்றதெற்கெல்லாம் துக்கம் கொள்ளுவது நமது அறியாமையே. தேவையானது ஒன்றே என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளையும், அது தேவனுக்கடுத்ததே என்கிற இயேசுவின் சிந்தையும் , தேவைக்கு தேவனை தேடும் கூட்டத்தால், தேவராஜ்யமும் அதின் நீதியும் கூட தேடப்படாமல் போனது வேதனை.
உணர்வோம் நாம்! காலம் இனி செல்லாது! இதோ நேசர் வாசற்படியில்! நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாயிருக்கிறதென்று சொல்லப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது, அது என் காலத்தில் இல்லையென்று சந்தோசப்படுகிற எசேக்கியாக்களாய் வாழாமல், உண்மையாய் சுத்திகரிப்புக்கு இடம் கொடுப்போம். அவர் கனிகளைத்தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது.
If we don't allow HIM to prune us for perfection (John 15:1-5) please always remember that there is axe placed down our roots permanently (Matthew 3:10).
கீழேவேர் பற்றி(அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும்) மேலே கனி (அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும்) கொடுக்கவில்லையென்றால் அறுத்துப்போடவும், வெட்டவும் அவர் ஆயத்தம்...கனி கொடுக்க முயற்சி செய்யத்துவங்கினோமாயின், நம்மை சுத்தம் பண்ணி அதிக கனிகளைக்கொடுக்க அவர் துணை புரிவார்.
புரிந்துகொள்வோம் மேலே வெட்டப்பட்டு சுத்திகரிக்க ஒப்புக்கொடுக்கவில்லையென்றால் வேரருகே கோடரி ஏற்கனவே ஆயத்தம்...
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள் யோவான் 15:8 நல்ல கனிகொடா மரஙளெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் மத்தேயு 3 : 10 -11.
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள் யோவான் 15:8 நல்ல கனிகொடா மரஙளெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் மத்தேயு 3 : 10 -11.
Comments (1)