மார்ட்டின் தெ போரஸ்
“உன்னைப் போல் பிறனை நேசி,” என்றார் இயேசு உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்பதே இதன் உள்ளான அர்த்தம். உலகத்திலே வாழ்ந்தாலும், உலகத்தின் உயிர்களிடத்தில் அன்பு பாராட்டாதிருந்தால் நம் வாழ்வில் எந்த பிரயோஜனமும் இல்லை.
மார்ட்டின் தெ போரஸ். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டில் 1579இல் பிறந்தார். அடிமைப் பெண்ணின் மகனாகப் பிறந்ததால் தந்தையார் இவரை கைவிட்டுச் சென்றார். ஏழ்மையும், வறுமையும் இவர் வாழ்க்கையை மிகவும் இக்கட்டுக்குள் மாற்றின. நிற வேற்றுமையாலும், அடிமைத்தன வாழ்க்கையை மிகவும் இக்கட்டுகள் மாற்றின. நிற வேற்றுமையாலும், அடிமைத்தன வழக்கத்தினாலும் இவர் மிகவும் பாதிக்கப்பட்டார். எனினும், சிறு பிராயத்திலேயே ஆண்டவர் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்ததினால், எல்லோரிடமும் சகஜமாக பழகும், நல்ல பண்பை பெற்றிருந்தார். கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற வாசகம் இவரை மிகவும் கவர்ந்த ஒன்று.
ஒருமுறை இவர் மடத்தில் வறுமை நிலவியது. பொருட்கள் ஒருமுறை அனைத்தையும் விற்று வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது மார்ட்டின் மட அதிபரிடம் சென்று இந்த எளிய அடிமையை விற்று, அதில் கிடைக்கும் பணத்தினால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று தன்னை அர்ப்பணித்தார். ஆனால் அதிபர் அதை மறுத்துவிட்டார். ஏழைகளின் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 160 ஏழைகளுக்கு உணவளித்தார்.
பணக்காரர்களிடம் உதவி பெற்று, வாரந்தோறும் பல ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார். மக்கள் இவரை “இரக்கத்தின் சொந்தக்காரர்” என்றும், “சமாதானத்தின் தூதர்” என்றும் அழைத்தனர். நோயாளிகளைத் தொட்டு சுகப்படுத்தும் சிறந்த ஆற்றலை பெற்றிருந்தார். மனிதரின் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்து அவர்களது விருப்பங்களுக்கு உதவி செய்யும் சிறந்த பண்பையும் பெற்றிருந்தார். துறவற சபையிலே அனைத்து பணியாளர்களுக்கும் முன்மாதிரியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டினார். இதனால், “அருட்செயல்களின் தந்தை” என்றும் அழைக்கப்பட்டார்.
பிறப்பு: கி.பி:1579, டிசம்பர் 09, (பெரு, தென் அமெரிக்கா)
இறப்பு: கி.பி:1639, நவம்பர் 03, (தென் அமெரிக்கா)
Comments (0)