Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 7

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 7

 

தேவன் உங்களை ஆளுகிறார் என்பதற்கு உங்கள் சாந்தகுணம் உயர்ந்ததொரு அத்தாட்சி.

வெறுமனே நல்லவனாயிருப்பதில் பயனில்லை. பிறருக்குப் பயன்படும் நல்லவனாக இருப்பதே சிறந்தது. – வேதாகம நண்பன்

கொடுப்பதற்கு கற்றுத் தாரும், ஆனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்று எண்ணிடாமல் கொடுப்பதற்கு. - இக்னேஷியஸ்

உலகிலேயே அதிகக் கடினமான பணிக்களத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று ஊழியம் செய்வேன். – இராபர்ட் மாரீஸன்

பாவத்தின் வேரை அகற்றாத வரை வாழ்வில் சமாதானம் என்பது எட்டாத கனிதான்.

கிறிஸ்துவின் நாமம் வாழ்க! ஒயிட்பீல்டுவின் நாமம் வீழ்க. – ஜார்ஜ் ஒயிட்பீல்டு

மிஷனெரிகள் நிலைத்து நின்றதற்கான முக்கிய ஆதாரம், ஜெப ஆதரவாளர்களின் ஜெபமே. – ரோலன்ட்

இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏதும் தாமதம் இல்லாது இப்போதே வா. – மரியான் உபதேசியார்

என்னுடைய இரட்சகரைப் பற்றி பேசுவதற்கு, எனக்கு ஒரு நாவுக்கு மேல் இல்லையே. - ரிங்கல் தௌபே

இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனைப் படுக்கையில் நான் செலவழிக்கமாட்டேன். – கார்ல் பேக்கர்

ஆண்டவரே! ஆன்மாக்களை எனக்குத் தாரும். மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்ளும். – ஜான் போஸ்கோ

கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், கடவுளுக்காக அரிய காரியங்களை சாதிக்கப்பார்! – வில்லியம் கேரி

ஆண்டவரே, உலகம் முழுவதையும் மனமாற்றம் செய்வதற்கு முன் அம்மனமாற்றத்தை முதலில் என்னிலிருந்து ஆரம்பியும். – பில்லி கிரஹாம்

ஆண்டவரை தம்முடையவராக்கிக் கொள்ளாத பேர்பெற்ற மனிதரெல்லாம் வாழ்வில் பெருந்தோல்வி அடைந்தவர்களே.

கர்த்தர் செய்யச் சொல்லுகிற காரியங்களைச் செய்கிற எவரும் தவறு செய்வதில்லை.

அன்பே நமது ஊழியத்தின் அஸ்திபாரமாக இருக்குமானால் நாம் ஜீவிப்பதில் பிரயோஜனம் உண்டு. மற்றபடி அது பூமிக்கும் மற்றவர்களுக்கும் பாரமாகத்தான் இருக்கும்.

கிறிஸ்தவர்களோடு மரிப்பேன் அல்லது அவர்களோடு உயிரோடு இருப்பேன். – சார்லஸ் மீட்

குருட்டுத் தனமாய் அற்பகாரியங்களில் உன் கவனத்தைச் செலுத்தி பெரிய காரியங்களை நழுவ விடாதே. ஆத்தும இரட்சிப்பு மிகப்பெரியது.

தேவனோடு சமாதானம் என்பது ஒரு பெரிய காரியமாகும், அந்த சமாதானத்தை நீங்கள் பெறுவீர்களானால் தேவன் உங்கள் நண்பராக இருப்பார். – ராபர்ட் ஏனன்

தேவனுடைய திருப்பணியில் உழைப்பதைக் காட்டிலும் சிறந்ததொரு பணி வேறில்லை. – வில்லியம் கேரி

ஆண்டவரின் வழிநடத்துதல் இல்லாமல் நாம் ஒன்றும் செய்யாதிருப்போம். இக்காரியத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறாரென்று ஒருமனப்பட்டு நம்புகிறோம். – நேட் செயின்ட்

ஏழைகளுக்கு தன் பொருளைக் கொடுக்கிறவன் அதை விடவும் அதிகம் பெறுவான். – ஜான் பண்யன்

வாலிபரே விழித்தெழும்புங்கள்! பாவ ரோகத்தால் நசிந்து போகும் ஆன்மாக்கள் எத்தனை என்று சற்று நினைத்துப் பாருங்கள். – சாது சுந்தர் சிங்

நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, அதில் எவ்வளவு அன்பு வைத்துக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். – அன்னை தெரசா

என் இயேசுவைப் பாடிய நாவால் வேறொருவரையும் புகழ்ந்து பாடமாட்டேன். – வேதநாயகம் சாஸ்திரியார்

 

Posted in Missionary Quotes on February 26 at 10:48 AM

Comments (0)

No login
gif