Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 5

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 5

 

சிலுவையை சுமந்து வாழ்பவரே இரட்சகரின் திருமுக பிரகாசத்திற்குள் நடந்து செல்வர். – சாது சுந்தர் சிங்

நான் பல பட்டணங்களை விட்டு விடைபெறும்போது ஆண்களும், பெண்களும் எனது வார்த்தையைக் கேட்டு, கண்ணீர் விட்டு அழுகின்றனர். – ஸ்வர்ணரோலா

ஆண்டவரே! இந்தியாவிலே நான் இருந்திட வேண்டுமென நீர் விரும்பினால், என்வாழ்நாளெல்லாம் இந்த மகளிருக்கு உதவி செய்திட முயற்சிப்பேன். – ஐடாஸ்கடர்

மனிதன் வெற்றியை விரும்புகிறான் ஆனால், தேவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறார்.

மிஷனெரிகளை அனுப்பாத சபை செத்த சபை நற்செய்திப் பணியில் உற்சாகமற்ற சபை உறைந்து போகும். – ஆஸ்வால்டு ஸ்மித்

அண்ட சராசரங்களைப் படைத்த இறைவனைப் பார்க்கும் அருள் பெற்ற ஆன்மாவுக்கு மற்றெல்லா படைப்புகளும் ஒரு துரும்பே. – பெனடிக்ட்

எனக்கு இரண்டு தலைகள் இருந்தால் கிறிஸ்துவுக்காக அவை இரண்டுமே வெட்டப்பட வேண்டுமானாலும் நான் விட்டுவிடுவேன். – ஹென்றி வாஸ்

இறை சித்தம் ஒன்றையே இதய ஏக்கமாக கொண்டுள்ள மனிதரே முழு சுதந்திரம் அடைந்தவர் ஆவார். – ஏ.டபிள்யு.டோசர்

ஜீவியம் ஒன்றே ஒன்றுதான், அது விரைவில் கழிந்துவிடும். நாம் கிறிஸ்துவுக்காக என்ன செய்தோமோ அது மட்டுமே நிலை நிற்கும்.

ஆ! எனக்கு நூறு வாழ்க்கையிருந்தால் அவை அத்தனையும் சீனாவுக்காகவே வாழ்ந்திருப்பேன். – ஹட்சன் டெய்லர்

நான் தொங்க வேண்டிய கயிற்றை முத்தம் செய்ய ஆயத்தம். ஆனால் ஒருபோதும் என் விசுவாசத்தை மறுதலிக்க மாட்டேன். – இக்பால்

இழந்துபோன ஒரு ஆத்துமாவுக்காக கடவுளிடம் பரிந்து பேசினபோது, யாதொரு வார்த்தையும் சொல்லமுடியாமல் அழுகையும், புலம்பலுமே எனக்கு வந்தன. – சார்லஸ் பின்னி

நாம் மெல்லிய இறகு மெத்தையில் பயணம் செய்து விண்ணகம் சென்றடைய நினைக்கக் கூடாது. – தாமஸ் மூர்

தேவன் கொடுக்கும் மேன்மையானதை நீ பெற விரும்பினால், அவர் உன்னை அங்கே சந்திக்கும் வரை அமைதியாக ஒரு வாக்குத்தத்தத்தில் காத்திரு.

வாயினால் கிறிஸ்துவை பிரசங்கிக்கிறவன் பிரசங்கியல்ல. உண்மையான கிறிஸ்தவனாக ஜீவிப்பவனே சுவிசேஷ பிரசங்கி.

ஆன்மாக்களுக்காக பற்றி எரியும் வைராக்கியத்தை எனக்கு தாரும். – அலெக்ஸாண்டர் மெக்கே

கிறிஸ்தவர்களில் இரு சாராரே உண்டு. ஒன்று ஆத்தும ஆதாயகர், மற்றொன்று பின்மாற்றக்காரர். – ஆன்ட்ரு முர்ரே

துன்புறுத்தல்களை விட பேர் புகழே அநேக தீர்க்கர்களைக் கொன்று விட்டது. – வேன்ஸ் ஹேவ்னர்

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதைக் காட்டிலும் ஆழமான சந்தோஷம் வேறெதிலும் இல்லை. – லோத்தி மூன்

நற்குணங்களோடு இணைந்திராதவனின் இதயம் இறைவனை விட்டு வெகுதூரம் விலகியே இருக்கிறது. – ஜீவ நீரோடை

கிறிஸ்துவிடம் நெருங்கி வரும்போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்கள் குறித்த வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது. – ஜேம்ஸ்

உன்னால் கட்ட முடியாமல் போனாலும் கட்டுகிறவனுக்குப் பொருளை சேகரித்து கொடுக்கிறவனாக நீ இருக்கலாம்.

பாவம் மனிதனுக்கு  தேவனை மறைக்கிறது, ஆனால் அது தேவனுக்கு மனிதனை மறைப்பதில்லை.

பரிசுத்த வேதாகமத்தை தங்களுடைய வழிகாட்டியாக மக்கள் கொள்வார்களென்றால் இரட்சிப்பை விட்டு அவர்கள் எப்படி வழி தவறிப் போகக்கூடும். – மைக்கேல் பாரடே

பிரசங்க பீடமானது நமது தாலந்துகளை வெளிக்காட்டும் கொலு மண்டபமாகலாம். ஆனால் ஜெப அறையோ அதற்கு மரண தணடனை விதிக்கும். – ரேவன் ஹில்

 

Posted in Missionary Quotes on February 26 at 10:38 AM

Comments (0)

No login
gif