Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 6

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 6

 

ஆன்மீக மனிதனின் முதல் அடையாளம் அவன் பரவசத்தைவிட பரிசுத்தத்தை நாடுவான். – ஏ. டபிள்யு. டோசர்

நம் ஜீவியத்தில் தேவனை முதன்மையாக வைத்தால் நமக்கு நேரிடும் எப்படிப்பட்ட தீமையைக் குறித்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை.

விருப்பம் இல்லாத காரியம் எதிர்ப்படும்போது ஒருமணிநேரம் வேதத்துடன் ஒட்டிக்கொள். – சுவார்ட்ஸ்

ஆண்டவரே! உமக்காக நான் வேதனைப்பட்டு நிந்திக்கப்படும் வரம் எனக்குத் தாரும். – சிலுவையின் யோவான்

நீ செய்வதையெல்லாம் கடவுளுக்கு ஒப்புக்கொடு. அவருக்கு ஒப்புக்கொடாமல் செய்யும் வேலை அனைத்தும் வீணே.

ஊழியத்தில் கிடைக்கும் ஊதியம் கொஞ்சமாயிருந்தாலும் அது தேவ கரத்தினின்று வருவது. எனவே குறைவின்றி போஷிப்பார். – பி. சாமுவேல்

சாத்தானோடு விளையாடி மகிழ விரும்புகிறவன் கிறிஸ்துவுடன் பேரின்பம் அனுபவிக்க முடியாது.

இயேசுவோடு நாம் மகிமையடைய விரும்பினால் அவர் பருகிய கசப்பான கிண்ணத்திலிருந்து நாமும் பருக தயாராக இருக்க வேண்டும்.

உலகின் எப்பகுதியிலும், எக்காலத்திலாகிலும் உண்மையைச் சுட்டிக்காட்டிய ஞானிகள் கிறிஸ்தவர்களே. – ஜஸ்டின்

இயேசுவின் துன்பத்தில் பங்கு கொண்டால்தான் அவரது இன்பத்தில் பங்கு கொள்ள முடியும். – சார்லஸ் தெ ஃபூக்கோ

கிறிஸ்து என் ஜீவனாயிருக்கையில் அவரில்லாமல், நான் எப்படி ஜீவிக்க முடியும். – பக்த்சிங்

கடவுளுக்காக போரிடும் நாம், உலகம் அறியாத அமைதியை அனுபவித்து வருகிறோம். – புளூனோ

சத்தியத்தை கூறுபவர்களைக் கட்டி வைக்கலாம், சுட்டெரிக்கலாம். ஆனால் சத்தியத்தைக் கட்டி வைக்கவும் முடியாது, சுட்டெரிக்கவும் முடியாது.

இந்த உலகம் நமக்காக வைக்கப்பட்டிருக்கிற கடவுளுடைய பாடசாலை. – பேட்டன்

இளம்  வயதிலிருந்தே உத்தம கிறிஸ்தவ பயிற்சி பெறுகிறவர்கள், பிற்காலத்தில் திருச்சபைக்கும், உலகுக்கும் ஏராளமான நன்மை செய்வார்கள்.

நான் என்னைக் காத்துக் கொள்ளாமல், உண்மையைக் காத்துக் கொள்ளும் வரைக்கும் இதே மன தைரியத்துடன் இருப்பேன். – சீகன் பால்கு

உண்மையில் நிலையான வாழ்க்கை என்பதற்கு உட்பொருள் இழப்பதே, அதனை அடைவதற்கு வழி என்பதாகும். – ககாவா

கர்த்தர் தமது பரிசுத்தவான்களுடைய இருதயத்தில் என்னென்ன ஆசைகளை அனுமதித்திருக்கிறாரோ அவைகளின் நிறைவேறுதலையும் தந்தருளுவார். – சாட்விக்

உங்களின் ஆடைகளைத் தரித்துக் கொள்ளுங்கள் தேவனுக்கு பரிசுத்தம் என்ற பட்டத்தை அணிந்து கொள்ளுங்கள். – ஜான் பிளெச்சர்

நரகத்தின் நுழைவு வாசலில் ஒரு மீட்பின் கடையை நடத்த விரும்புகிறேன். – சி. டி. ஸ்டட்

எப்பொழுது ஒரு மனிதன் தன் உரிமைகளை மறந்து கடமைகளைச் செய்ய எண்ணுகிறாரோ, அப்பொழுது தான் ஜனநாயகம் இயங்கத் தொடங்குகிறது. - ஆலிஸ்

கடவுளை அறியாத மக்கள் கூட்டம் பூமியில் இருக்கிறது என்று நான் அறிவேனானால் நான் ஒருபோதும் இளைப்பாற முடியாது. – பிரான்சிஸ் சேவியர்

நாம் இவ்வுலகத்திற்காக உருவாக்கப்படவில்லை நித்தியத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவோம். – வேதா

சிறு குற்றங்களையும் கவனத்துடன் விலக்கி நட. சிறு குற்றங்களை பயமின்றி செய்கிறவன், பெரிய குற்றங்களுக்கு உள்ளாவான். – பிலிப்பு நேரியார்

இரண்டு காரியங்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. ஒன்று நான் ஒரு பாவி; இரண்டாவது கிறிஸ்து என் இரட்சகர். – ஜான் நியூட்டன்

Posted in Missionary Quotes on February 26 at 10:42 AM

Comments (0)

No login
gif