நற்சாட்சியாக வாழ முடியாத மனிதன் நற்செய்தியைப் பிரசங்கிக்க தகுதியற்றவன்.
ஒன்றுமில்லாததிலிருந்து உருவாக்குகிறவர் தான் தேவன், ஆகவே தான் மனிதரைக் கொண்டு அவரால் ஒன்றும் உருவாக்க முடிவதில்லை. – மார்ட்டின் லூத்தர்
ஆண்டவரே! நான் உம்மண்டையில் சேர்வதையே இப்பூமியில் பெரும் ஆவலாகக் கொள்கிறேன். – சாராள் பிளவர் ஆடம்ஸ்
ஆண்டவரே ஸ்காட்லாந்தை எனக்குத் தாரும். இல்லையேல் நான் சாகிறேன். – ஜான் நாக்ஸ்
கடவுளின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன். கிறிஸ்து சிந்தின இரத்தத்தால் என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நான் அவரிடம் அச்சமின்றிச் செல்வேன். – ஐசக் வாட்ஸ்
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மீதான அன்பில் விழ வேண்டும். அப்போது அவர்கள் தாமகவே அருட்பணிக்கு முன்வருவார்கள். – ஹெலன் ரோஸ்வியர்
ஊழியத்திற்காக ஊதியம் வேண்டும். ஆனால் ஊதியத்திற்காக ஊழியம் வேண்டாம். – வேதாகம நண்பன்
எல்லையற்ற உமது அன்பு என் உள்ளத்தில் குடிகொள்வதைவிட, எனக்கென்று இவ்வுலகில் எதையுமே விரும்பவில்லை. – சார்லஸ் வெஸ்லி
கிறிஸ்தவராக வளர்வது முக்கியமல்ல, கிறிஸ்துவுக்குள் வளர்வதே முக்கியம். – வேதாகம நண்பன்
ஆண்டவருக்கு உன் பொருட்கள் அனைத்தையும் விட உன் அர்ப்பணிப்பான உள்ளமே வேண்டும்.
திறமைகள் இருப்பதால் ஊழியத்திற்கு அர்ப்பணிக்காதே, திறமைகள் இல்லாதவர்களைக் கொண்டே தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.
வேதாகமம் உன்னைப் பாவத்திலிருந்து விலக்கும், இல்லையானால் பாவம் உன்னை வேதாகமத்திலிருந்து விலக்கும்.
துடிப்பான உற்சாகத்தோடு செய்யும் எந்த ஒரு செயலும், சரித்திரம் பேசும் சாதனைகளை ஏற்படுத்தும். – வேதாகம நண்பன்
ஊழியரின் பிரஸ்தாபத்தை உலகம் பார்க்கும், ஊழியரின் உண்மையையோ கர்த்தர் பார்க்கிறார். – ஜீவ நீரோடை
இன்றைய திருச்சபைக்கு நின்ற நிலையிலேயே சிந்திக்கக்கூடிய மனிதர்கள் தேவை. – டி. எல். மூடி
தனக்குள் மனமாற்றம் ஏற்படாதவரை, பிறருக்குள் மனமாற்றத்தை எதிர்பார்ப்பது வேடிக்கையே.
இயேசுகிறிஸ்துவுக்குள் மட்டுமே பாவியான மனிதன் நீதிமானாக்கப்படுகிறான். – ஜான் விக்ளிப்
உற்சாகத்துடன் எரிபந்தமாய் சென்றிடு. நீ எரிவதை கண்டிட மக்கள் பல மைல் தூரம் நடந்து வந்து கவனிப்பர். – ஜான் வெஸ்லி
உன் ஓய்வினை சீக்கிரம் எடுத்துக் கொள்ளாதே, எடுத்துக் கொண்டால் உனது உண்மை ஓய்வினை நீ அடைய முடியாது. – ஜான் பிரவுன்
விசுவாச வாழ்க்கை என்பது ஆண்டவரை பயன்படுத்தும் வாழ்க்கையாகும். – ஹான்ட்லி மோல்
Comments (4)