Missionary Quotes in Tamil - Part 9

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 9

 

நீங்கள் கிறிஸ்துவின் மந்தையை சேர்ந்தவர்களெனில், அவர் சத்தம் கேட்கும் செவியையும், சித்தத்தில் நடக்கும் பாதங்களையும் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் பிள்ளைகள் கிறிஸ்துநாதரின் போதனைகளால் போதிக்கப்பட, அவர் காட்டிய மிகுந்த தாழ்மையின் வல்லமையை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

இந்தியாவில் கிறிஸ்துவை அறியாமல் வாழும் மக்களுக்கு அவரின் அன்பைக் குறித்து தெரிவிக்க, என் உள்ளம் துடிக்கிறது. – ஜேம்ஸ் ஹாப்

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறைவனுக்கு ஏற்ற மக்களை தயார் செய்ய வேண்டும். இதை ஒருபோதும் மறத்தல் கூடாது.

குற்றம் கண்டுபிடிப்பதே ஒரு தொழிலாய் கொண்டிருப்பவனுக்கு நற்காரியங்கள் எவைகள் என்று புலப்படாது.

தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு உரிமைகோர இயலாது. – ஜான் கால்வின்

முற்றிலும் உடைபட்ட மனிதர்களையே தேவன் தம்முடைய மகிமைக்காக பயன்படுத்த இயலும்.

உங்கள் அரசரிடம் போய் கூறுங்கள், நான் உகாண்டாவின் பாதைகளை என் இரத்தத்தால் வாங்கி விட்டேன். – ஜேம்ஸ் ஹன்னிங்டன்

உன் ஆன்மாவின் கண்களைத் திறக்கும்படி, உடலின் கண்களை மூடி உன் இதயத்தின் மத்தியில் இருக்கும் இயேசுவை உற்று நோக்கு. – ஆவிலா தெரசா

உறுதியால் அல்ல, விடா முயற்சியாலேயே உயர்ந்த காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.

நான் நூறாவது முறை வேதாகமத்தை வாசிக்கிற இந்த வேளையில் முதலாவது முறை வாசித்ததைக் காட்டிலும் இனிமையாக இருக்கிறது. – சார்லஸ் ஸ்பர்ஜன்

உலகிற்கு நற்செய்தி சொல்ல வேண்டுமானால் அதை உன் குடும்பத்திலிருந்து ஆரம்பி.

இயேசு இல்லையென்றால் நம் வாழ்க்கை பூஜ்ஜியம். இயேசு நமக்குள் இருந்தால் நாம் தான் ராஜ்ஜியம்.

சாத்தான் சீறுகிறான், ஆனால் அவன் தோல்வியடைவான். கர்த்தர் வாசலைத் திறப்பாரேயானால் யார் அதை மூடுவான். – ரேனியஸ்

நாம் இரண்டாம் வருகையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பாதி உலகிற்கு இன்னும் முதல் வருகையைப் பற்றிக் கூட தெரியவில்லையே! – ஆஸ்வால்டு ஜே. ஸ்மித்

கிறிஸ்துவின் ராஜ்ஜியம் விரிவடைவதற்குப் பல வழிகள் நம்முன்னே இருக்கின்றன. செயல்படுவது நம் கைகளிலே.

கிறிஸ்துவின் வெற்றி வாழ்க்கைக்கு தரிசனமும் தாகமும் இன்றியமையாத இரண்டு அம்சங்கள்.

பண ஆசையை மேற்கொள்வதற்கு ஒரே வழி கொடுத்துப் பழகுவது தான். – ஜான் தாமஸ்

மாபெரும் தேவனோடு பழகிவிட்டவன் என்றுமே மானிடரின் பரிந்து பேசுதலுக்குக் காத்திருக்க மாட்டான்.

தேவனுடைய பார்வையில் உலகத்தின் செல்வங்களை எல்லாம் கொட்டிக் கொடுத்தாலும், அவை ஓர் ஆத்துமாவின் விலைக்கு ஈடாக முடியாது. – மேய்ப்பர் சுந்தரம்

என்றுமே குறையாத விசுவாச பாதையில் செல்லும், அன்பினை எனக்குத் தாரும். – ஏமி கார்மிக்கேல்

தேவனை அறிந்திருக்கிறவர்கள் தான் வீர சாகசம் புரிவோர். தேவனைப் புகழ்வோர் அல்ல. – ரேவண் ஹில்

உணவினால் உடலை வளர்ப்பதுபோல, ஜெபத்தினால் உங்கள் ஐக்கியத்தை வளருங்கள்.

ஏழைகளின் நன்மைக்காக என் கைகளைத் துண்டித்து, என் கண்களைப் பிடுங்கி துன்புறுத்தினாலும், அதை நான் பாக்கியமாகக் கருதுவேன். – எட்மண்ட்

நீ செய்வது அனைத்திலும் உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனையே நினைத்துக் கொள். – வின்சென்ட் ஃபெரர்

 

Posted in Missionary Quotes on February 26 at 10:59 AM

Comments (0)

No login
gif