Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 8

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 8

 

என்னை விட இயேசுவை சிநேகிக்கிறவர்கள் உண்டானால், அவர்கள் பாதம் நான் தேடி, உட்கார்ந்து படிப்பேன். – வீர சூரியா

தன்னில் தானே அனலில்லாதவன், மற்றவர்களுக்கு அனல் உண்டாக்க முடியாது.

நான் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகு செல்வதற்கு நேரமாகிவிட்டது. என் நேசர் இயேசுவின் இரத்த புண்ணியத்தை நம்பியே மறுஉலகு செல்கிறேன். – ஜான் வெஸ்லி

சுவிசேஷ வேலைகள் இந்தியாவில் பெலப்பட இந்திய குருக்கள் அதிகம் அவசியம். – கோரே சாஸ்திரி

கிறிஸ்துவைத் தன் இருதயத்திலும் பரலோகத்தை தன் கண் முன்னும் வைத்திருக்கும் ஒரு விசுவாசியை எந்த வேதனையும், சோதனையும் ஒன்றும் செய்ய இயலாது.

பதவியும் வயதும் உயர உயர நாம் அதிக ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். அதிக நாள் வாழ்ந்தால், கடவுள் நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பார்.

ஆண்டவர் தரும் பெலத்தை ஒருவராலும் எடுக்கவோ, கொடுக்கவோ முடியாது. – வேதாகம நண்பன்

தன்னைத் தியாகம் செய்ய முன்வராத எந்தவொரு நபரினாலும், எந்த ஒரு ஆத்துமாவையும் நேசர் இயேசுவின் கல்வாரி சிலுவையண்டை கொண்டுவர முடியாது.

உம் சித்தத்தோடு ஒன்றாகி நிற்பதைப் பொறுத்தே என் மகிழ்ச்சி உள்ளது என்று நான் சிந்திக்கச் செய்யும். – ஹென்றி மார்ட்டின்

கர்த்தர் உன்னைத் தம்முடைய ஊழியத்திற்கு அழைக்கும்போது அதற்குப் பதிலாக பணமாவது, ஜெபமாவது உகந்த ஈடாகாது.

கடவுளின் இருதயத்தை உடைக்கும் செயல்கள் என் இருதயத்தையும் உடைக்கட்டும். – பாப் பியர்ஸ்

கிறிஸ்துவானவருடன் நெருங்கி வாழ்வதன் மூலமாகவே நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் இவ்வுலகம் முழுவதும் அவருடைய ஒப்பற்ற அன்பை அறிந்துக்கொள்ள செய்யவும் இயலும். - ஆன்ட்ருஸ்

தேவனுடைய சித்தத்தைச் செய்வது நமது அலுவல்களில் ஒன்றல்ல, அதுவே நமது அலுவல். – அந்திரேயா துஷ்

தேவ சித்தத்தை நிறைவேற்ற இணக்கம் தெரிவிப்போருக்கு மட்டுமே தேவன் தமது சித்தத்தை வெளிப்படுத்துவார். – ஹில்லஸ் ஜேஸ்பர்

ஒவ்வொரு சோதனையும் நாம் தேவன் அருகில் மேலும் நெருங்கிச் சேரும் சந்தர்ப்பங்கள். – ஜான் குயின்லி

கடவுளோடு நெருங்கி ஜீவித்தவர்கள் எவரும் வாழ்க்கையை வீணடித்தவர்கள் அல்ல. – ஹோரிடியஸ் போனர்

சமாதானம் உள்ளவனாயிரு, சமாதானத்தினால் நிறையப்படு, சமாதானத்தைப் பேசு, சமாதானத்தில் நட. – மெனோ சைமன்ஸ்

விசுவாச இரத்தத்தால் எரியூட்டப்பட வேண்டிய கிறிஸ்துவின் சுவிசேஷ விளக்காய் நில்! – வில்லியம் டின்டேல்

ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு அர்ப்பணமுள்ள வாழ்க்கை அநேகரை தேவனண்டை ஈர்க்கும்.

நாம் என்ன செய்கிறோம் என்பதை உலகம் பார்க்கிறது. நாம் எப்படி இருக்கிறோம் என்பதை இறைவன் பார்க்கிறார். – ஜீவ நீரோடை

மலைகளை இடம்மாறச் செய்கிறவர் முதலில் சிறு கற்களில் தான் தன் பணியைத் துவங்க வேண்டும்.

தேவனுடைய வார்த்தை ஒன்றைத் தவிர நியாயம் தீர்க்கும் சட்டமாக வேறொன்றையும் நான் அடையாளம் காட்டுவதற்கில்லை. – ஸ்விங்ளி

தேவன் உங்களை எங்கு வைத்திருக்கிறாரோ அங்கே அவருக்கு உண்மையாயிருங்கள். – வில்லியம் கர்னல்

இந்த அடிமைகளிடம் முதலில் நாம் வாயால் பேசுவதை விட்டுவிட்டு நமது தொண்டு நிறைந்த கைகளால் பேசவேண்டும். – பீட்டர் கிளேவர்

கடவுள் கிருபையால் நாம் இங்கிலாந்தில் கொளுத்தப்போகும் அக்கினியை ஒருவராலும் அணைக்க முடியாது. – லாட்டிமர்

 

Posted in Missionary Quotes on February 26 at 10:53 AM

Comments (0)

No login
gif