வில்லியம் கெளடி
இறைப்பற்றுமிக்க அன்னையின் அரவணைப்பில் அற்புதமாக வளர்ந்தவர் வில்லையம் கெளடி. தந்தை ஒரு இறை பணியாளர். 1882 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிஷனெரியாக வந்தார். சென்னையில் ஜார்ஜ் டவுன் மற்றும் புனித தாமஸ் மலையின் வெஸ்லி சபைகளில் பணிபுரிந்தார்.
1883ஆம் ஆண்டு திருவள்ளூர் பகுதியில் தன் ஊழியத்தை ஆரம்பித்தார். ஏழைகளின் மீது பரிவு கொண்டு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தலித் மக்கள் மீது பாசம் கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சுவிசேஷம் சொன்னபோது உயர்ஜாதி மக்கள் கற்களையும், நாற்றமெடுக்கும் சேற்றையும் அவர்மீது அள்ளி வீசினார். கல்லெறிந்த மக்களைப் பார்த்து, “நீங்கள் என்மீது கல்மழை பொழிந்தீர்கள், ஆனால் ஆண்டவர் உங்களுக்கு அரிசி மழையை பொழிவார்” என்று அவர்களை ஆசீர்வதித்தார். அப்போது அப்பகுதி மிகுந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலப்பிரபுக்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழை மக்களை விடுவித்தார். அவர்களின் நிலங்களை அவர்களுக்கே திரும்ப கிடைக்கும்படி செய்தார்.
ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் பள்ளிகளை ஏற்படுத்தினார். விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டது. ஈக்காடு என்ற கிராமம் கெளடியால் செழிப்பைப் பெற்றது. கடும் பிரயாசத்தின் பலனாக ஈக்காட்டில் வெஸ்லி ஆலயத்தையும் கட்டினார்.
முதல் உலகப்போரில் தன் மகன்கள் இருவரை இழுக்கக் கொடுத்தும், சோர்ந்து போகாமல் தன் கடைசி மூச்சு வரை இந்தியர்களுக்காகவே வாழ்ந்த கெளடி உலகிற்கு ஓர் வரப்பிரசாதம்.
பிறப்பு: கி.பி:1857, மே 06, (சென்னர்விக் ஸ்காட்லாந்து)
இறப்பு: கி.பி:1922, ஏப்ரல் 09, (இந்தியா)`
Comments (0)