Today Bible Verse

William Hunter History in Tamil

வில்லியம் ஹண்ட்டர்

     வில்லியம் ஹண்ட்டருக்கு வயது 19, துள்ளித் திரியும் வாலிபப் பருவம். ஆனால், கை கால்கள் கட்டப்பட்டவனாக மக்கள் வேடிக்கைப் பார்க்கும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான்.

     நீண்ட அங்கி அணிந்த ஒருவர் வந்தார். வில்லியத்தை மிகுந்த கோபத்துடன், முறைத்துப் பார்த்தார். அவருடைய உருவம் பார்ப்பதற்கு மிகுந்த பயமாயிருந்தது. சிங்கத்தின் கர்ஜனை போலக் கர்ஜிக்க ஆரம்பித்தார். இயேசுவை மறுதலித்து விடு. இல்லையானால் எரிந்து சாம்பலாகி விடுவாய்.

     ஹண்டர் புன்முறுவல் செய்தான். தன்னுள் இயேசு இருப்பதை எண்ணி தைரியம் கொண்டான். கிறிஸ்துவுக்காக எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தயாரானான். இங்கிலாந்தை ஆட்சி செய்த மேரி அரசியின் சட்டப்படி திருவிருந்தில் பயன்படுத்தப்படும் திராட்சைரசமும் அப்பமும் ஹண்டரின் முன் வைக்கப்பட்டன. அவைகளின் முன் விழுந்து வணங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டான்.

     ஆனால் ஹண்டரோ இயேசுவை மட்டுமே வணங்குவதாகும் வேறே பொருட்களை வணங்குவதில்லை என்றான். பெற்றோர் அவனை நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் வளர்த்திருந்ததால் தன் பக்தியில் உறுதியாகக் காணப்பட்டான். எனவே 9 மாதங்கள் கடும் சித்தரவதைகளைச் சிறைச்சாலையில் அனுபவித்தான். எனினும் அவன் விசுவாசம் எள்ளளவும் குறைந்து போகவில்லை.

     இறுதியாக வில்லியத்தை சுட்டெரிக்கும் நாள் வந்தது. இரத்த சாட்சியாக மரிப்பதற்குச் சிறிதும் அஞ்சாமல் முகமலர்ச்சியுடனும், தைரியத்துடனும் கம்பத்தை நோக்கிச் சென்றான். கொடூரர்கள் அவன் உடலை தீ வைக்க ஆரம்பித்தனர். வில்லியம் வானத்தை அண்ணாந்து பார்த்து “தேவனுடைய குமாரனே என்மேல் பிரகாசியும்” என்று கூறும் வேளையிலே அவன் உயிர் மேகங்களுடனே மேலெழும்பியது.

பிறப்பு: கி.பி:1536, (பிரண்ட்வுட், இங்கிலாந்து)

இறப்பு: கி.பி:1555, மார்ச் 27, (இங்கிலாந்து)

Posted in Missionary Short Story on February 15 at 07:50 AM

Comments (0)

No login
gif