ஜான் டி பிரிட்டோ
போர்ச்சுக்கல் நாட்டு இளவரசனின் நண்பனாக இளமையை இன்பமுடன் கழித்து வந்தார் ஜான் டி பிரிட்டோ.
திடீரென வந்தது தீராத நோய். இறைவனிடம் வேண்டவே நோயினின்று விடுதலை பெற்றார். இறை பணியில் நாட்டம் கொண்டார். கத்தோலிக்க முறைப்படி குரு பட்டமும் பெற்றார்.
பிரான்சிஸ் சேவியரின் வழியைப் பின்பற்றி இந்தியா வந்தார். இந்தியர்களைப் போன்ற உடை உடுத்தி அவர்களைப் போல மாறினார். தன் பெயரை அருளானந்தர் என மாற்றினார்.
1684ஆம் ஆண்டு இந்தியாவில் சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து கிடந்தன. மக்கள் கிறிஸ்தவர்களானதால் சாதி பிரச்சனை தலைத் தூக்கியது. மக்களை கிறிஸ்துவின் பாதையில் நடத்தினதற்காக குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தர் சிறையில் அடைக்கப்பட்டு தடியால் அடிக்கப்பட்டார்.
அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய ஆற்றலை இறைவனிடமிருந்து பெற்றதால் சேவகர்கள் அடித்த அடியில் கண்தெறித்து விழுந்த ஒருவரின் கண்களைப் பொருத்திப் பார்வையடையச் செய்தார்.
தடியத்தேவன் என்பவனை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார் அருளானந்தர். தன் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினார் அவர். இதனால் வெகுண்டெழுந்த சேதுபதி என்ற அரசன் மக்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றும் அருளானந்தரை கொல்ல திட்டமிட்டார்.
சேவகர்கள் அருளானந்தரை கை, கால் கட்டப்பட்டவராக அரசனிடம் கொண்டு வந்தார்கள். விசுவாசத்தில் நிலைத்து நின்ற காரணத்தால் அவர் தலை கொடூரமாக வெட்டப்பட்டது. அவர் இரத்தம் சிந்திய இடமோ சிவப்பு மணலாக இன்றும் காட்சியளிக்கின்றது. அவர் இரத்த சாட்சியாக தமிழ்நாட்டில் உள்ள ஓரியூர் என்ற ஊரில் மரித்தார்.
பிறப்பு: கி.பி:1647, மார்ச் 01, (லிஸ்பன், போர்ச்சுக்கல்)
இறப்பு: கி.பி:1693, பிப்ரவரி 04, (ஓரியூர், இந்தியா)
Comments (0)