ஜேம்ஸ் ரென்ஸ்விக்
“அன்புமிக்க நண்பர்களே! தேவன் அதிக தயவாக நான் மரண பயத்தை எதிர்த்து நிற்க, அவருடைய பெலனை எனக்கு அளித்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் மரித்து மகிமைக்குள் செல்லலாம் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். இவ்வுலகத்தில் உங்களைத் தவிர மற்ற எந்த காரியத்தை விட்டு பிரியவும், நான் துக்கப்படவில்லை. உங்களிடத்தில் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். அருமையான உடன் ஊழியர்களே, ஆட்டுகுட்டியானவரைப் பின்பற்றுகிறவர்களே உங்களுக்கு என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவை ஜேம்ஸ் ரென்ஸ்விக்கின் இறுதி வார்த்தைகள்.
ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பெற்றோருக்கு மகனாக, பிறந்தவர் ஜேம்ஸ். இளமையிலேயே ஆண்டவரை உற்சாகமாக தேடுவதிலும், ஜெபிப்பதிலும் சிறந்தவராகக் காணப்பட்டார். படிப்பதற்கு வசதியற்றவராகப் காணப்பட்டதால், இவரின் தூய்மையான வாழ்க்கையை பார்த்த, உறைவினர்கள் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.
அந்த காலத்தில் பட்டம் பெறும் ஒவ்வொருவனும், நான் அரசனை இந்த ராஜ்யத்தின் எல்லா காரியங்களிலேயும், ஆளுகை கர்த்தாவாக ஏற்றுக் கொள்கிறேன். அரசனின் ஆளுகைக்கும், வல்லமைக்கும் எந்தவிதத்திலும் கீழ்ப்படியாமல் இருக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், ஜேம்ஸ் கிறிஸ்துவையே தன் ராஜாவாக ஏற்றுக் கொண்டதால், அரசனின் அராஜகத்தை வெறுத்தார். கத்தோலிக்க சட்டத் திட்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். கிறிஸ்துவைப் பின்பற்றி, உபத்திரவங்களை சகித்து உடன்படிக்கைக்குச் சொந்தகாரர்களாக விளங்கிய மக்களுக்கு போதகரானார்.
அரசனின் ஆட்களால் பிடிக்கப்பட்ட இவர், கிறிஸ்துவை மறுதலிக்கவும், அரசனை வணங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், இவர் அதனை மறுக்கவே, கொடுமையான தண்டனைகளை அனுபவித்தார். 1688ஆம் ஆண்டு, பலமுறை விசாரிக்கப்பட்ட இவர் இறுதியில் தன் விசுவாசத்தில் நிலைத்து நின்றதால், கருப்பு துணியால் உடல் மூடப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
பிறப்பு: கி.பி:1662, பிப்ரவரி 15, (ஸ்காட்லாந்து)
இறப்பு: கி.பி:1688, பிப்ரவரி 17, (ஸ்காட்லாந்து)
Comments (1)