ஜேம்ஸ் ஹெப்பர்ன்
வேலை கிடைக்கவில்லை. இது பல இளைஞர்களின் மனக் குமுறல். “எத்தனையோ இடத்திற்கு விண்ணப்பம் கொடுத்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை,” என்று தன்னையே நொந்து கொள்வார்கள். ஆனால், வேலை கிடைத்த பலருக்கோ தங்கள் பணியிடங்களில் நிம்மதி கிடைக்கவில்லை என்பார்கள். சரியான தெரிவு செய்தல் இதில் முக்கியமானது.
ஜேம்ஸ் ஹெப்பர்ன் ஒரு டாக்டர். தன்னுடைய வேலையை முழுவதுமாக ஆண்டவருடைய கரத்தில் அர்ப்பணித்தார். உலகப்பிரகாரமாக உழைப்பதைக் காட்டிலும், உன்னதருக்காக உழைக்க வேண்டும் என்பதில் மிகுந்த பாரம் உடையவராகக் காணப்பட்டார். மருத்துவ மிஷனெரியாக ஷியாம் என்ற இடத்திற்குச் செல்ல நினைத்தார். ஆனால் சூழ்நிலைகளின் சாதகமற்ற நிகழ்வுகளினால் 1841ஆம் வருடம் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
கடல் பயணத்தின்போது, ஜேம்ஸின் மனைவி கிளாரா கர்ப்பிணியாயிருந்தார். துரதிஷ்டவசமாக அக்கரு கலைந்துபோனது. மிகவும் வேதனைக்குள்ளானார். ஜேம்ஸ், எனினும், கிறிஸ்துவுக்குள் தன்னை தேற்றிக் கொண்டார். ஓபியம் போர் காரணமாக சீனாவில் இவர் அனுமதிக்கப்படாததால், இரண்டு வருடத்திற்குப் பின் சீனா சென்றார். 5 வருடங்கள் அங்கு கடினமாக பணி செய்து, கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார்.
1859ஆம் வருடம் ஜப்பான் நாட்டிற்கு மிஷனெரியாகத் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். அங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடங்களைக் கட்டினார். ஜப்பான் ஆங்கில அகராதியை வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் ஆர்வமுடன் ஈடுபட்டார். இவரின் இரண்டாவது குழந்தையும், பிறந்து சில மணிநேரங்களில் இறந்துபோனது. சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தார். எனினும், தன் அழைப்பில் நிலைத்து நின்று அங்கு தன் பணியை வெற்றிகரமாக செய்து, 96ஆம் வயதில் இறைவனுக்குள் இளைப்பாறினார்.
பிறப்பு: கி.பி:1815, மார்ச் 13, (மில்ட்டன், பெனிசில்வேனியா)
இறப்பு: கி.பி:1911, ஜூன் 11,
Comments (1)