ஜோனத்தான் கோபோர்த்
மிஷனெரிப் பணி, அது உயிரைப் பணயம் வைத்து செயல்படும், பாடுகள் நிறைந்த பணி: பிறர் உயிர் வாழ தன்னுயிர் கொடுக்கும் தியாகப் பணி: பெறுவதும், இழப்பதும் இதில் சகஜம். மிஷனெரிகள் ஒவ்வொருவரும் இழப்பிற்குப் பெயர் போனவர்கள்.
1888ஆம் ஆண்டு தன் மனைவியுடன் பயணத்தை ஆரம்பித்தார் ஜோனத்தான் கோபோர்த். கனடா நாட்டிலிருந்து சீன நாட்டை நோக்கிய பயணம் அது. மிகுந்த தாகத்துடனும், மாபெரும் தரிசனத்துடனும் சீனாவை அடைந்தார்.
சுவிசேஷப் பணிக்கான இடங்களை தெரிவு செய்தார். ஊர் ஊராக, தெருத் தெருவாகச் சென்று பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதே இவரின் திட்டமாகும். மிஷனெரிப் பணியில் வசதிகளைத் தேடி ஓட முடியுமா?
சுகாதார சீர்கேடுகள் இவரையும், குடும்பத்தையும் தாக்க ஆரம்பித்தது. இரத்த பேதி நோயினால், முதல் குழந்தையை இழந்தார். இரண்டாவது குழந்தை, உடல் செயல்பாடு இழப்பினால் மரித்துப் போனது, ஓர் அறியப்படாத நோயினால், மூன்றாவது குழந்தையும் மரித்துப் போனது, ஒன்றன்பின் ஒன்றாகத் தனது ஆறு குழந்தைகளையும் இழந்தார்.
வாழ்க்கையின் இழப்புகளால் வேதனை அடைந்த அவரை வேத வசனங்களே ஆறுதல் படுத்தியது. தன் இழப்பைப் பெரிதுபடுத்தாமல் மீண்டும் இறைபணியைத் தொடர்ந்தார். பலமுறைகள் சீன மக்களால் தாக்கப்பட்டார். நோய் நொடிகளால் தன் பலத்தை இழந்தார். பல இடங்கள் மாறியதால் அவர் உடல் சோர்வு கொண்டது.
“பாக்சர் யுத்தம்” என்று சொல்லப்படும் சீனப் போரில் படுகாயம் அடைந்தார். எத்தனையோ உபத்திரவங்கள் ஏற்பட்டபோதும், ஆயிரக்கணக்கான மக்களை இரட்சிப்பிற்குள் நடத்தி, ஞானஸ்நானம் கொடுத்தார்.
பிறப்பு: கி.பி:1859, பிப்ரவரி 10, (கனடா)
இறப்பு: கி.பி:1936, அக்டோபர் 8, (சீனா)
Comments (1)