ஆபிரகாம் லிங்கன்
கடின முயற்சிகளும் விடாமுயற்சிகளும் முன்னேற்றத்தைத் தரும். ஆனால் ஜெபமோ ஜெயத்தைத் தரும். வாழ்க்கையின் முன்னேற்றத்தோடு கூடிய ஜெபம் நமக்கு அவசியம், பாவத்தை வென்று மகிழ்ச்சியடைய ஜெபமே சிறந்த வழியாகும். ஜெபத்தின் இரகசியத்தை அறிந்துகொண்டதினால் உயர்வு பெற்றவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தன்னை மாற்றிய ஆபிரகாம் லிங்கன்.
பிறப்பிலே இவர் ஏழ்மை. ஒரே ஒரு வருடம் மட்டுமே பள்ளிக்கு சென்றவர். சிறுவயதிலேயே வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற தீரா ஆசை கொண்டு வளரும் பருவத்தில் அதனை நிறைவு செய்தார். பல கால கட்டங்களில் பற்பல தோல்விகள், ஏமாற்றங்கள், பரிகாசங்கள், ஆனால் இவர் எவற்றையும் கண்டு துவண்டு விடாமல் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் காட்டினார்.
1861ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களுக்காக உழைக்கத் தன்னை அர்ப்பணித்தார். ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பயன்படுத்தி வந்த அநியாயச் செயலை அடியோடு ஒழித்தார். பிளவுபட்ட அமெரிக்காவை ஒன்றாக இணைத்தார். வேத வசனங்களின் மீது அபார நம்பிக்கை கொண்ட இவர், தன் பேச்சுக்கள் மூலம் வேத வசனங்களை மக்களிடம் பதியச் செய்தார். ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்த இவர் தன் அலுவலகத்தில் ஜெபத்திற்கென்று நேரம் ஒதுக்கினார்.
ஆண்டவரோடு தனித்திருந்து ஜெபிப்பதின் மூலம் இவருடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தைக் கண்டார். இத்தகைய மாபெரும் விசுவாச வீரர் 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் ஒரு நடிகனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மறைந்தாலும் அவர் ஏற்றிய சுதந்திர தீபம் இன்னும் அணையவில்லை.
பிறப்பு: கி.பி:1809, பிப்ரவரி 12, (கென்டுக்கி, அமெரிக்கா)
இறப்பு: கி.பி:1865, ஏப்ரல் 14, (அமெரிக்கா)
Comments (1)