ரிச்சர்ட் உம்பிராண்ட்
ருமேனியா நாடு. கம்யூனிச கொள்கை தலைவிரித்தாடிய சமயம். கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு சித்தரவதைகளை அனுபவித்தனர்.
பல கிறிஸ்தவ சபைகள் கம்யூனிச ஆட்சிக்கு இணங்கி செயலற்றுப் போயின. இக்கட்டான சூழ்நிலை எங்கும் நிலவியது. அச்சமயத்தில் சிங்கமெனச் சீறி எழுந்தார். ரிச்சர்ட் உம்பிராண்ட்.
திருச்சபையை பாதுகாக்கும் எண்ணத்திலும், மக்களை விசுவாசத்தில் நிலைக்கச் செய்யும் முயற்சியிலும் விறுவிறுப்பாகச் செயல்பட்டார். இரகசியமாக பாதாள ஆலயம் ஒன்றை ஏற்படுத்தினார். மக்கள் கூட்டம் நிறைந்தது. உலக பயங்கள் அனைத்தும் அவர்களை உதறிவிட்டு ஓடியது.
ரிச்சர்டு ஒரு போதகராக செயல்பட்டார். மக்களுக்கு இரட்சிப்பின் நிச்சயத்தை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருந்தார். அஞ்ஞானத்தின் கொடுமைகளும் அதிகமானது. கம்யூனிசவாதிகள் கிறிஸ்தவர்களின் நிலங்களை அபகரித்தனர். வீடுகள் சிதைக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் தங்க வீடின்றி வீதிகளில் அலையும் அபாயமான நிலை ஏற்பட்டது.
1948ஆம் ஆண்டு, ரிச்சர்டு தம் பாதாள ஆலயத்திற்கு போகும் வழியில் திடீரென ஒரு கும்பல் ரிச்சர்டை மடக்கிப் பிடித்தது. 8 ஆண்டுகள் சிறையில் கொடூரமான தண்டனைகளை அனுபவித்தார். அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அவரின் மனைவிக்கு சொல்லப்பட்டது. அந்நிலையில் அவர்கள் தேவனைத் துதித்துப் பாடினார்கள்.
கம்யூனிசம் நல்லது, கிறிஸ்தவம் முட்டாள்தனமானது என்ற வார்த்தைகளையே நாள்முழுவதும் கேட்கவேண்டியதிருந்தாலும் ரிச்சர்டு இயேசுவை போற்றி பாடுவதிலேயே உறுதியாயிருந்தார். பல கொடூரத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் 25 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றார்.
வேதப்புத்தகத்தை ருமேனியர்களுக்கு கொடுப்பதில் தீவிரம் காட்டி, கம்யூனிசவாதிகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கிய ரிச்சர்டு தன் வாழ்நாளின் இறுதியில் இரத்தசாட்சியானார்.
பிறப்பு: கி.பி:1909, (இஸ்தான்புல், துருக்கி)
இறப்பு: கி.பி:2001, (ருமேனியா)
Comments (2)