ஜான் ஹன்ட்
“ஜான், நீ உலகத்திலேயே மிக மோசமான காட்டுமிராண்டிகள் வாழும் பிஜீ தீவுகளுக்கு மிஷனெரி பணி செய்ய போக வேண்டும். அதற்கு நீ ஆயத்தமா?” ஜானின் மிஷனெரி இயக்கத் தலைவர் இக்கேள்வியைக் கேட்டார்.
ஆப்பிரிக்கா செல்ல வேண்டும் என்று எண்ணிய ஜான், ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்து பிஜீ தீவுகளுக்கு செல்ல தன்னை அர்ப்பணித்தார். பசுபிக் மகா சமுத்திரத்தில் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சிறு சிறு தீவுக் கூட்டங்களே பிஜீ.
ஒவ்வொரு தீவையும் குறுநில மன்னன் ஆண்டு வந்ததால் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதிலும், மக்களை கொன்றுக் குவிப்பதிலுமே நாட்களை கடத்தி வந்தனர். கணவன் இறந்தவுடன் மனைவியும் உயிருடன் புதைக்கப்பட்டார். இல்லையெனில் கணவனின் தீய ஆவிகள் உலவும் என்பது அவர்களின் மூட நம்பிக்கை.
இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப் புறப்பட்டார். ஜான் ஹண்ட், ஆனால் கப்பல் லாகம்பா தீவை அடைந்த போது அங்குள்ள மிஷனெரியின் சரீர சுகமற்ற நிலையினால் அவருக்கு உதவியாக இருந்து தன் பணியினைத் தொடர்ந்தார்.
ஆறு வாரத்தில் அம்மக்களின் மொழியினைக் கற்றுக் கொண்ட ஹண்ட், வேத கதைகளை பிஜீ மொழியில் எழுதினார். கூடி வந்த மக்களுக்கு அவைகளைப் போதித்தார். இதனால் விசுவாசிகளின் எண்ணிக்கைப் பெருகிற்று. அவருடைய உடல் பெலவீனப்பட்டாலும் பிஜீ தீவை விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. ஹண்டின் ஊழியத்தினால் அத்தீவு மக்கள் மூடப் பழக்கவழக்கங்களை விட்டனர். பலர் ஞானஸ்நானம் பெற்றனர்.
36 வயது நிரம்பிய ஜான் ஹண்ட், உடல் பலவீனத்தால் இதே நாள் 1848ஆம் ஆண்டு தன் உடலை பிஜீ தீவு மக்களுக்காக கொடுத்தார். இவர் உடல் இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று 90 சதவீதத்தினர் பிஜீ தீவில் கிறிஸ்தவர்கள்.
பிறப்பு: கி.பி:1812 (லின்கோலன்சிர், இங்கிலாந்து)
இறப்பு: கி.பி:1848, அக்டோபர் 09, (பிஜீ தீவு)
Comments (1)