Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 1

மிஷனெரி பொன்மொழிகள் பகுதி 1


மெய் சந்தோஷம் தேவ சித்தத்தோடு ஐக்கியம் கொள்வதால் உண்டாகுமேயொழிய, புலன்களால் வரும் சந்தோஷம் சந்தோஷமல்ல. பிரான்சிஸ் பெனலன்

தன்னால் இழக்க முடியாத ஒன்றைப் பெற்றுக் கொள்ள, தன்னால் வைத்திருக்க முடியாத ஒன்றை இழப்பவன் முட்டாளல்ல. ஜிம் எலியட்

ஒரு மனிதனாவது மனுஷியாவது அப்போஸ்தலர்களைப் போல், வல்லமையுடையவர்களாய்க் காணப்பட்டால் அது தேசத்தை அசைக்கும் வல்லமையை உண்டாக்கும். ஜார்ஜ் பாக்ஸ்

கிறிஸ்துவுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தியவரே கிறிஸ்துவின் இரத்தத்தைப் பருகுவதற்கு தகுதியானவராவர்.

பகைவர் பெருகினால் தூய்மையாய் வாழ கவனமாயிரு, நண்பர்கள் பெருகினால் தூய்மையைத் தக்கவைக்க ஜாக்கிரதையாயிரு. - ஜீவ நீரோடை

இயேசுவின் மேல் கொண்ட உன்னதமான நம்பிக்கையின் வீரனாக அவருக்காக மடிய நான் தயார். தேவசகாயம் பிள்ளை

வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்வி எதுவெனில், நாம் மற்றவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே. – மார்ட்டின் லூத்தர் கிங்

முன்னேறி செல்லுங்கள், பரிசுத்த வாழ்வு வாழுங்கள், ஒருவரையொருவர் நேசியுங்கள். – கேத்தரின் பூத்

அன்புக்கூராமல் கொடுக்க முடியும். ஆனால் கொடுக்காமல் அன்புகூர முடியாது. – ஏமி கார்மிக்கேல்

தன் ஆத்துமத்தை சிநேகிக்கிறவனெல்லாம், இந்த சுவிசேஷத்திற்கு செவிகொடுப்பானாக! – பெப்ரீஷியஸ்

வெற்றிக்கரமான உலக சுவிசேஷ ஊழியத்திற்கு நமது குணாதிசயமே திறவுகோல். – ஷர்வுட் எட்டி

இயேசுவுக்கான முழுமையாய் அர்ப்பணிக்கப்பட்ட எந்த வாழ்வும் ஒருபோதும் வீணாய் போவதில்லை. – தியோடர் வில்லியம்ஸ்

இறைவனுக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டவனைப் போல் உலகத்தில் சுதந்திரமாக வாழ்கிறவன் யாருமில்லை. – ஜீவ நீரோடை

ஒற்றுமையின் சீர்குலைவுக்கு வித்திடுகிறவர்கள் சுவிசேஷத்தின் எதிராளிகள். – லெஸ்லி நியூபிகின்

சுயசித்தம் நரகத்திற்கு அழைத்துச் செல்லுமேயொழிய ஒருபோதும் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லாது. – சார்லஸ் ஸ்பர்ஜன்

உண்மையான தலைமைத்துவம் அன்பில் வேரூன்றி ஊழியத்தில் செயலாற்ற வேண்டும். – எங்ஸ்டேராம்

தன்னைத் தானே தியாகம் செய்வது, அன்றாடம் செலுத்த வேண்டிய விலைக்கிரயம் ஆகும். – ஆஸ்வால்டு சேன்டர்ஸ்

ஆண்டவர் என் இருதயத்தைத் திறந்தார். அவரைத் துதிக்க என் வாயைத் திறந்தேன். – H.A. கிருஷ்ணப்பிள்ளை

என்னை எல்லா கட்டுகளிலிருந்தும் விடுவித்து, கல்வாரியின் ஆணிகள் என்னில் பாய, என்னைத் திறக்க உதவி செய்யும். – ஜிம் எலியட்

இறைவனுக்காக எவ்வளவு செய்கிறாய் என்பதல்ல அவர் எதிர்பார்ப்பதை செய்கிறாயா என்பதே முக்கியம். – ஜீவ நீரோடை

ஆண்டவருக்காக அமைதியுடன் காத்திரு. சீக்கிரத்தில் அவர் குரலை கேட்பாய். மரணம் வெற்றியால் விழுங்கப்படும். – ஜார்ஜ் மத்தீசன்

மகிமை பெற்ற மாபெரும் ஆன்மாக்கள், புயலால் தாலாட்டுப் பெற்று, பெரும் காற்றால் பாலூட்டப்பட்டவர்கள்.

வாழ்க்கை நாம் உயிர் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறரையும் வாழச் செய்வதற்கே.

 

Posted in Missionary Quotes on February 26 at 08:59 AM

Comments (0)

No login
gif