Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 2

மிஷனெரி பொன்மொழிகள் பகுதி 2


தேவ அன்பின் அனலில் வாழப் பழகியவனை உலகத்தின் நெருப்புகள் ஒன்றும் செய்வதில்லை.

வீரமுடனும் அஞ்சா நெஞ்சத்துடனும் கிறிஸ்துவுக்காக பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். – பெர்பெத்துவா

உயர்ந்த கருத்துகளை உலகம் தர முடியும். உயர்ந்த வாழ்க்கையையோ இயேசு மட்டுமே தருவார். – ஜீவ நீரோடை

தேவனுக்கென்று பெருங்காரியங்களைச் செய்வதில், முதலில் அவரைப் பூரணமாக நம்ப வேண்டும். – மேக் டொனால்டு

நல்லொழுக்கமுள்ளவனே உயர்ந்த நிலைகளில் உயர முடியும். – ஆஸ்வால்டு சேன்டர்ஸ்

பற்றியெரியும் பக்தி இல்லாத ஒரு சீடனை, மன்னிக்கவே முடியாது. – மேக் டொனால்டு

ஜெபத்தினால் இளைப்பாறுதலை பெறாதவன் இன்னும் இறைவனிடம் வந்து சேரவில்லை. – ஜீவ நீரோடை

திருவிருந்தில் பங்கு பெறுகிறவன் கிறிஸ்துவோடு இணைகிறான் கிறிஸ்துவும் அவனில் வாசம் செய்கிறார். – சிரில்

நாம் கர்த்தருக்கு கீழ்படியும்போது, அதன் முழு பொறுப்பும் அவரைச் சார்ந்தது. – ஹட்சன் டெய்லர்

கடவுள் நம்முடைய நண்பராக இருக்கவில்லையானால், எந்த ஒரு நண்பனும் நமக்கு உதவ முடியாது. – மார்ட்டின் லூத்தர்

நான் தேவனுக்கென்று நெருப்பாய் எரிந்து போகட்டும். – ஹென்றி மார்ட்டின்

இன்றைய கடமையை தள்ளி வைப்பதால் நாளைய கடமையிலிருந்து தப்பித்துவிட முடியாது. – ஆபிரகாம் லிங்கன்

தன் முழுமையையும் ஈடுபடுத்தி சுயத்தை வெறுத்து செய்யும் பணியே அன்பு. – கிரிப் தாமஸ்

கிறிஸ்தவன் சாட்சியாக வாழாவிட்டால், காட்சி பொருளாய் மாறி விடுவான். – வேதா

கிறிஸ்து வாழ்கிறார் என்பதை வாயினால் சொல். அவர் உன்னிடம் வாழ்கிறார் என்பதை வாழ்க்கையினால் சொல். – ஜீவ நீரோடை

எந்த ஒரு கிறிஸ்தவனும் தனது ஆவிக்குரிய நிலையைப் பற்றிய சுய திருப்தி கொள்ளக் கூடாது.

கிறிஸ்துவின் சிறந்த பண்புள்ள விநோத மனிதனாயிரு. மக்கள் உன்னைப்பற்றி யாது கூறினும் கூறட்டும். - டி.எல்.மூடி

தூய ஆவியானவர் உன் ஆன்மாவை நெருப்பிலிட்டு வடிவமைத்து, மெருகேற்றும்போது நீ அமர்ந்திரு. – லாரன்ஸ்

கர்த்தர் செய்ய சொல்லுகிற காரியங்களை செய்கிற எவனும் தவறு செய்வதில்லை. – தாமஸ் கூக்

செய்ய முடியாதது என்பதை செய்து முடிப்பதில் ஆர்வம் கொள்ளுகிற மனிதன் மீது கடவுள் சிறப்பு அன்பு செலுத்துகிறார். – வில்லியம் பூத்

நீ ஆண்டவரின் நண்பனானதால் அவர் அரியணையில் உனக்கு பங்கு உண்டு. – ஜே. ஜே. லின்ச்

நாம் கிறிஸ்துவை நமக்குள் எவ்வளவு அனுமதிக்கிறோமோ அவ்வளவு தான் கிறிஸ்துவுக்குள் நாம் பிரவேசிக்க முடியும். – பி.ரோஜர்ஸ்

நாம் நிச்சயம் உள்ளவர்களாயிருந்தால் நாம் ஆர்ப்பாட்டம் செய்ய அவசியமில்லை. – மேரி இ. ஷானன்

உன் செல்வத்தை பதுக்கி வைத்தல் அழிவே. அதை இழத்தல் வாழ்வே. ஆதலால் கொடு. – பேசன்ஸ் ஸ்ட்டிராங்

பாவத்தை விட சாவையே விரும்புகிறேன். – தோமினிக் சாவியோ

Posted in Missionary Quotes on February 26 at 10:15 AM

Comments (0)

No login
gif