Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 3

மிஷனெரி பொன்மொழிகள் பகுதி 3

 

அவர் உன்னை அழைக்கிறார், ஆதலால் பொன் திறவுகோல் கொண்டு அவர் காட்டும் தூய இடத்தில் பிரவேசி. – ஜார்ஜ் முல்லர்

கடவுளுடைய வாகனங்களின் வெற்றிப் பயணத்தை தடைகள் எவையும் தடுக்க முடியாது. – ஹானா ஸ்மித்

உமது நோக்கம் உயர்ந்ததாயிருப்பின் நீயும் உயர்வாய் உன் மூலம் உலகம் வளமானதாகும். - பிலிப்ஸ் புரூக்ஸ்

நமது இழப்புகள் எவ்வளவு தான் பெரிதாக இருப்பினும், நம் எஜமானர் நம்மை அழைக்கும் வரை நமது பணிகளை விட்டுவிடுதல் கூடாது. – ஜே. ஆர். மில்லார்

மனசாட்சி என்னும் சிறு தீபம், தேவனால் ஏற்றி வைக்கப்பட்டிருக்குமேயானால் அதை எவரும் முழுவதும் அவித்து போட முடியாது. – மேத்யூ ஹென்றி

நல்லவனாக இருப்பதும், நன்மை செய்வதுமே நமது நற்செய்தி பணியாக இருக்க வேண்டும். – சார்லஸ் தெ பூக்கோ

தான் சிலுவையில் அறையப்பட தயாராயிருந்தாலன்றி எந்த திருச்சபையோ அல்லது இயக்கமோ நீடித்து வாழ முடியாது. - வின்செஸ்டர்

இப்போது உயிரோடிருக்கும் நாம், இப்பணியின் பயனை ஒருவேளை காணமாட்டோம். ஆனால் நமக்கு பின்வரும் சந்ததியார் நிச்சயமாக அதனைக் காண்பார்கள். – கிரிண்ட்லர்

பாடுபட்டு பணம் சேர்த்து வைப்பதில் பயன் இல்லை. நிறைந்த பயன் வேண்டுமெனில், கிறிஸ்துவுக்கு சேவை செய்யுங்கள். – ஜான் பெர்க்மான்ஸ்

கர்த்தரே உன்னை நடத்த வேண்டுமென்று நீ விரும்புவாயானால் உன்னுடைய முக்கிய வேலை கர்த்தருடைய வேலையாக இருக்க வேண்டும்.

இதுவரைக்கும் கர்த்தர் செய்த உதவிக்கு நன்றியுள்ளவனாயிரு. இனி அவர் செய்யப் போகும் உதவிக்கு நம்பிக்கையுள்ளவனாயிரு.

நான் மோட்சத்திற்கு சென்றவுடன் என் முதற்பார்வை என் இரட்சகரின் முகத்தையே பார்க்கும். – ஃபானி கிராஸ்பி

மனிதன் தனக்கு மேல்பூச்சு பூசிக் கொள்கிறான். ஆனால் அவனுடைய இருதயத்தை வெண்மையாக்க தேவனால் மாத்திரமே கூடும்.

உலகம் தன் கால்களில் நின்று வெற்றியைத் தேட முயற்சிக்கிறது. உண்மை கிறிஸ்தவன் தன் முழங்காலில் நின்று அதைப் பெறுகிறான்.

உலகத்தின் பேரில் பற்று வைக்காமல், வரப்போகும் நியாயத்தீர்ப்பை மனதில் கொண்டு, தூய வாழ்க்கை நடத்த முயலுங்கள். – அந்தோணி

இன்று இயேசு கிறிஸ்து வருவார் என்ற சிந்தையோடு ஆயத்தமாய் ஜீவிப்பவனே உத்தம கிறிஸ்தவன்.

நான் மாறுதலடைந்தது என் சுய அறிவுத் திறமையல்ல, கடவுளே இதற்குக் காரணம். – சிப்ரியன்

எந்த காரியத்திலும் தாழ்மையை கடைபிடிப்பவன் தன்னை அறியாமலேயே மேலான பதவிக்கு வந்துவிடுவான்.

சத்தியத்தை அறிந்து நீங்கள் விடுதலையாகாவிட்டால், பொய் உங்களை சிறைபிடிக்கும். – வேதாகம நண்பன்

கடவுளுக்காகவே வேதனையை அனுபவி, அப்படியானால் பூமியிலேயே மோட்சத்தை அனுபவிப்பாய். – ஜெரால்ட் மஜெல்லா

கர்த்தர் தம்முடைய ஊழியத்துக்கு உன்னை அழைத்து அனுப்பும்போது யார் உன்னை பின்பற்றுகிறார்கள் என்று திரும்பி பார்க்காதே.

தேவனோடு இரகசியமாய் நடக்கக் கற்றுக்கொண்டவன் தனது துன்பங்களை விளம்பரம் செய்வதில்லை.

எந்த அளவுக்கு ஒருவரின் அர்ப்பணிப்பு உள்ளதோ, அந்த அளவுக்கு ஒருவரின் ஆற்றலின் அளவும் இருக்கும். – வில்லியம் பூத்

நமக்கு வரும் ஆயிரமாயிரமான துன்பங்களில் சில மட்டுமல்ல ஒவ்வொன்றும் விசுவாசியின் வாழ்க்கையில் நன்மையை நடப்பிக்கிறது. – ஜார்ஜ் முல்லர்

ஒரு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே என்றில்லாமல் ஒரு வாழ்க்கை முழுவதற்குமாய் என்றெண்ணி புறப்படுங்கள். – அதோனிராம் ஜட்சன்

Posted in Missionary Quotes on February 26 at 10:24 AM

Comments (0)

No login
gif