Today Bible Verse

Missionary Quotes in Tamil - Part 4

மிஷனெரி பொன்மொழிகள்  பகுதி 4

 

உன்னை உற்றுப் பார்த்தால் துன்பங்கள் பெருகும், தேவனை நோக்கிப் பார்த்தால் துன்பங்கள் மறையும்.

கிறிஸ்து மார்க்கத்தின் வேலை ஒருவனை துன்பத்திலிருந்து காப்பாற்றுவதல்ல, மாறாக துன்பத்திற்குள்ளேயே காப்பாற்றுவதாகும். – ஸ்டான்லி ஜோன்ஸ்

நற்செய்தி பணியில் வெற்றியடைய தீட்டும் திட்டங்களில் மிகச் சிறந்த வழி இயேசு காட்டிய வழியே. அது கோதுமை மணிபோல் நிலத்தில் விழுந்து சாவதே. – ராக்லாந்து

தேவனுக்கு நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, தேவனுக்குரியதை நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதே.

நம் ஜனங்கள் வெளிச்சம் அடையும்படி நாம் நம்மையும் நம்முடையவைகளையும் தத்தம் செய்ய வேண்டும். – சவரிராயன் இயேசுதாசன்

முழு உலகத்திற்கு என் வாழ்வைக் கொடுக்காமல், என் வாழ்வை இழக்கமாட்டேன். – டேவிட் பிரெய்னார்டு

தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியாதவர்கள் அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு உரிமை கோர முடியாது. – ஜான் கால்வின்

கடவுளின் அருள் எனக்கு இருந்திராவிடில் நான் இறுதிவரை கல் மனிதனாக எல்லோருக்கும் சுமையாகவே இருந்திருப்பேன். – வின்சென்ட்

சோதனைகளும் வேதனைகளும் வரும்போதுதான் இருதயத்தின் பெருமை குணமாகிறது. – ஜார்ஜ் ஒயிட்பீல்டு

கிறிஸ்து இருந்தால் கிடங்கும் சிங்காசனமாகும். கிறிஸ்து இல்லையெனில் கிடங்கும் நரகமாகும். – மார்ட்டின் லூத்தர்

எவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலை வாஞ்சிப்போம். – லியோனார்டு ரேவன் ஹில்

திருச்சபையானது மேம்பட்ட முறைகளை தேடுகிறது. திருவுள்ளமோ மேம்பட்ட மனிதரைத் தேடுகிறது. – இ.எம்.பெளண்ட்ஸ்

கடவுள் தம் ஒரே குமாரனையும் மிஷனெரியாகத் தந்து விட்டார். – டேவிட் லிவிங்ஸ்டன்

மற்றவர்களுக்காக உன்னை நீ மறந்து விடு, மற்றவர்கள் ஒருக்காலும் உன்னை மறவார்கள்.

நரகத்தின் காட்சியை ஒரு நொடி பார்த்துவிட்டால் நாம் மக்களது மீட்பிற்காக அங்கலாய்ப்பதை யாரும் தடுக்க முடியாது. – வில்லியம் பூத்

தேவனுக்கென்று உங்களை அர்ப்பணிக்கவில்லையெனில், குழப்பத்திற்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்கள். – ஸ்டேன்லி ஜோன்ஸ்

நம்பிக்கை ஒளிவெள்ளம் என் இதயத்தில் பாய்ந்து, சந்தேகம் என்னும் இருளை அடித்துச் சென்றது. – அகஸ்டின்

விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஒரே கட்டில் கட்டப்பட்டவை. – ஸ்பர்ஜன்

சிலரது ஆவல் பொன், இன்னும் சிலரது ஆவல் புகழ், எனது ஆவலோ ஆன்மாக்களே. – வில்லியம் பூத்

தேவன் உனது தந்தை, கிறிஸ்து உன் சகோதரர், பரிசுத்த ஆவியானவர் உன் சூரியன். – சாமுவேல் மாரீஸ்

ஆத்துமாக்களை காப்பாற்ற பாடுகளை சகிக்கும் மிஷனெரிகள் வந்தால் போதும். – ஹட்சன் டெய்லர்

உலகப் பொருட்கள் நம்மிடமிருந்து எடுக்கப்படும் வரை நாம் அவைகளோடு ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாது. – அகஸ்டின்

இரட்சிப்பு வேண்டும், மோட்சம் வேண்டும் என்று கேளாமல் கிறிஸ்துவைத் தேடி அவர் வழியில் நடப்பதே முக்கியம். – பரமானந்தம் ஐயர்

சிறையில் நாங்கள் இறையியலை களைந்து இறைவனைக் கற்றுக் கொண்டோம். – ரிச்சர்டு உம்பிராண்ட்

உனது பரிசுத்தத்திற்கு தக்கதாக உனது கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி அமையும். – ராபர்ட் முர்ரே

 

Posted in Missionary Quotes on February 26 at 10:29 AM

Comments (0)

No login
gif